பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் 27ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ

14 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் வரும் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் வரும் 27ஆம் தேதி காலை 9.28 மணிக்கு கார்டோசாட் 3 செயற்கைகோள் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏவப்படும் 13 நானோ செயற்கைகோள்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானவை. இந்தியாவின் கார்டோசாட்-3
 

பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் 27ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ

14 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் வரும் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் வரும் 27ஆம் தேதி காலை 9.28 மணிக்கு கார்டோசாட் 3 செயற்கைகோள் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏவப்படும் 13 நானோ செயற்கைகோள்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானவை. இந்தியாவின் கார்டோசாட்-3 செயற்கைகோள் மேம்படுத்தப்பட்ட வகையைச் சேர்ந்தது. துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்ட இந்த செயற்கைகோள் புவி சுற்றுவட்டபாதையில் 509 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ ஏவும் 74ஆவது ராக்கெட் இதுவாகும்.

https://www.A1TamilNews.com

From around the web