வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்-2’!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த ஆய்வில், ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் ஈடுபடப் போகிறது. இந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘கவுன்ட் டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது. தற்போது அந்த
 

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த ஆய்வில், ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் ஈடுபடப் போகிறது.

இந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘கவுன்ட் டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து இன்று ‘சந்திரயான்-2’ விண்கலத்துடன், ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்றும் கூறினார்.  இந்நிலையில், கிரையோஜெனிக் ஸ்டேஜ் (சி25)ல், திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டது.  இதன்பின் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து சந்திரயான்-2 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் இன்று ஏவப்பட்டுள்ளது.

 

From around the web