அயோத்தி ராமர் கோவிலில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படுகிறதா? ராமஜென்மபூமி அறக்கட்டளை விளக்கம்!

அயோத்தியில் அமைக்கப்படும் ராமர் கோவிலுக்கு அடியில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படுமா? – ராமஜென்மபூமி அறக்கட்டளை மறுப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருக்கிறார். மிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட இருக்கும் இந்த கோவிலின் கட்டுமான பணிகள் அனைத்தும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அநேக போராட்டத்துக்குப்பின் ராமர் கோவில் அமைய இருப்பதால் எதிர்காலத்தில்
 

அயோத்தி  ராமர் கோவிலில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படுகிறதா?  ராமஜென்மபூமி அறக்கட்டளை விளக்கம்!யோத்தியில் அமைக்கப்படும் ராமர் கோவிலுக்கு அடியில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படுமா? – ராமஜென்மபூமி அறக்கட்டளை மறுப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

மிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட இருக்கும் இந்த கோவிலின் கட்டுமான பணிகள் அனைத்தும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் அநேக போராட்டத்துக்குப்பின் ராமர் கோவில் அமைய இருப்பதால் எதிர்காலத்தில் பிரச்சினை எதுவும் வராமல் இருப்பதற்காக கோவிலுக்கு அடியில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன.

அயோத்தியின் முழு வரலாறு மற்றும் கோவில் கட்டுவதற்காக நடத்தப்பட்ட சட்ட போராட்டங்கள் அனைத்தும் தகவல்களாக அந்த கேப்சூலில் வைத்து கோவிலுக்கு அடியில் 2 ஆயிரம் அடிக்கு கீழே புதைக்கப்படும்.

இந்த தகவலை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மறுத்துள்ளது. இது குறித்து கோவில் தொடர்பாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை வெளியிடும் தகவல்கள் மட்டுமே உண்மையானவை வதந்திகளை பரப்ப வேண்டாம் என அறக்கட்டளை -தலைவர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web