2019 பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி : இடியாப்பச் சிக்கலில் இருக்கிறாரா ரஜினிகாந்த்? – பகுதி 16

காங்கிரஸுடன் கூட்டணி வைக்காவிட்டால், பாஜகவுடனோ அல்லது தனித்து ஒரு கூட்டணியோ ரஜினிகாந்த் உருவாக்கலாம். பாஜகவுடன் என்றால் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஏன் பாமக கூட வரக்கூடும். காங்கிரஸுடன் திமுகவும் மதிகவும் கைகோர்க்கும். கமல் ஹாசனும் அவர்களுடன் சேரலாம். அதிமுக உதிரிக்கட்சிகளுடன் தனித்துவிடப்படும். டிடிவி தினகரன் யாருடன் சேர்வார் என்பது குழப்பமாகவே இருக்கும். பாஜக சாம பேத தண்டங்களைப் பயன்படுத்தியாவது தங்களுடன் ரஜினிகாந்தை இழுக்கப் பார்ப்பதாகத் தெரிகிறது. ராகுல் காந்தியும் திமுகவை விட, ‘மிஸ்டர் க்ளீன் ரஜினிகாந்த்’ பெட்டர்
 

காங்கிரஸுடன் கூட்டணி வைக்காவிட்டால், பாஜகவுடனோ அல்லது தனித்து ஒரு கூட்டணியோ ரஜினிகாந்த் உருவாக்கலாம். பாஜகவுடன் என்றால் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஏன் பாமக கூட வரக்கூடும். காங்கிரஸுடன் திமுகவும் மதிகவும் கைகோர்க்கும். கமல் ஹாசனும் அவர்களுடன் சேரலாம். அதிமுக உதிரிக்கட்சிகளுடன் தனித்துவிடப்படும். டிடிவி தினகரன் யாருடன் சேர்வார் என்பது குழப்பமாகவே இருக்கும்.

பாஜக சாம பேத தண்டங்களைப் பயன்படுத்தியாவது தங்களுடன் ரஜினிகாந்தை இழுக்கப் பார்ப்பதாகத் தெரிகிறது. ராகுல் காந்தியும் திமுகவை விட, ‘மிஸ்டர் க்ளீன் ரஜினிகாந்த்’ பெட்டர் எனக் கருதுகிறார். 2ஜியில் திமுகவால் காங்கிரஸுக்கும் அவப்பெயர் ஏற்பட்டதாகத்தான் அவர் நம்புகிறார். இரு தேசியக் கட்சிகளுமே ரஜினிகாந்தை தங்கள் வசம் இழுக்கப் பார்க்கிறார்கள். கட்சிக்கான கட்டமைப்பை தேர்ந்த அரசியல்வாதிகளை விடவும் நேர்த்தியாக செய்து வருவதை அனைத்துத் தலைவர்களும் கவனித்துத்தான் வருகிறார்கள்.

‘என் வழி தனி வழி’ என்று தனியாக ஒரு கூட்டணி உருவாக்க முயன்றால், ரஜினியுடன் தேமுதிகவும், விடுதலைச் சிறுத்தைகளும் வரலாம். திமுக-மதிமுக-கமல்ஹாசன் கூட்டணி உறுதியாகிவிடும். எத்தனை ரெய்டு அனுப்பினாலும் கடைசியில் அதிமுகவிடம் தஞ்சமடையும் பாஜக. டிடிவி தினகரனையும் சேர்த்துக் கொள்வார்கள். இதில் எதிலும் சேராமல் தனியாக நிற்கிறேன் என்று சீமான் வழக்கமான முடிவெடுக்கலாம்.

மக்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்தின் தனிக் கூட்டணியை வரவேற்பார்கள். அப்படி நடந்தால், மும்முனைப் போட்டியில் ரஜினியின் வெற்றி, தேர்தலுக்கு பின் அவரால் தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதைச் சார்ந்தே இருக்கும். “அடுத்த ஆட்சியில் ரஜினிகாந்த் பங்கெடுக்க முடியும், தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய முடியும்,” என்பதை மக்களுக்கு புரியவைப்பதைப் பொறுத்து அவர் வெற்றி அமையும்.

2019ல் தீர்மானமாகிவிட்ட கூட்டாளிகள் திமுக, மதிமுக மற்றும் கமல் ஹாசன் என உறுதியாகச் சொல்லலாம். ரஜினிகாந்துக்கு எதிராக மேடையேற்றுவதற்காகவே ஒன்றிரண்டு பாராளுமன்றத் தொகுதிகளைக் கொடுத்து கமல்ஹாசனை தங்கள் பக்கம் வைத்துக் கொள்வார் மு.க. ஸ்டாலின்.

ஜி.கே.வாசனின் த.மா.கா ரஜினி கட்சியுடன் இரண்டறக் கலந்து விடும். த.மா.கா வின் தலைவர் பொறுப்பு ரஜினிக்காக காத்திருக்கிறது என்று அப்போதே ஜி.கே. மூப்பனார் சொன்னார். இன்றைய சூழலில் த.மா.காவில் ரஜினி சேர்வது என்பது சரியாக இருக்காது என்பதால், த.மா.கா இவர் கட்சியில் கலந்துவிடும்.

பாமக பெரும்பாலும் அதிமுக – திமுக கூட்டணியை தவிர்க்கும். ஆனால் ரஜினியுடன் இணைவது சிரமம். அப்படி நடந்தாலும் ராமதாஸ் சீனில் இல்லாமல் அன்புமணி மட்டுமே முன்னெடுத்தால்தான் நடக்கும்.

ஆக ரஜினி முன் இவ்வளவு இடியாப்பச் சிக்கல்கள் இருக்கின்றன. இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது ரஜினி அவசரப்பட்டு இப்போதே முடிவெடுக்க முடியுமா? 2019 தேர்தலில் போட்டியிடும் முடிவை அவர் தீர ஆராயாமல் எடுக்கவே மாட்டார். அப்படி என்றால், எதற்கு இவ்வளவு பிரச்சனை? 2019 தேர்தலை தவிர்த்துவிட்டு நேரடியாக 2021ல் சட்டசபை தேர்தலை சந்திக்கலாமே என்கிற எண்ணம் நமக்கு வரும். அப்படி நடந்தால் அது ரஜினிக்கு சாதகமா? பாதகமா? அதையும் பார்ப்போம்.

தொடரும்..

– மனோகரன்

2019 தேர்தல் : ரஜினிகாந்த தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா? – பகுதி 15

From around the web