“நல்லதே பேசுவோம்”… தடம் மாறுகிறாரா ரஜினிகாந்த்?

துக்ளக் விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்தின் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. ”1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதா தேவியையும் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகக் கொண்டு வந்தார்கள்” – இது தான் ரஜினிகாந்த் பேச்சுபரபரப்பாக பேசப்படுவதற்கு முக்கிய காரணமானவை ஆகும். ஊர்வலத்தில் செருப்பு மாலை அணிவித்து வரவில்லை. பெரியாரை குறிபார்த்து ஜனசங் கட்சியைச் சார்ந்தவர்கள் வீசிய செருப்பை எடுத்துத் தான் தி.க. தொண்டர்கள்
 

 “நல்லதே பேசுவோம்”… தடம் மாறுகிறாரா ரஜினிகாந்த்?துக்ளக்  விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்தின் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

”1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதா தேவியையும் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகக் கொண்டு வந்தார்கள்” – இது தான் ரஜினிகாந்த் பேச்சுபரபரப்பாக பேசப்படுவதற்கு முக்கிய காரணமானவை ஆகும்.

ஊர்வலத்தில் செருப்பு மாலை அணிவித்து வரவில்லை.  பெரியாரை குறிபார்த்து ஜனசங் கட்சியைச் சார்ந்தவர்கள் வீசிய செருப்பை எடுத்துத் தான் தி.க. தொண்டர்கள் ராமர் படத்தை அடித்தார்கள் என்பது பெரியாரிஸ்டுகளின் வாதம்..

இதற்கு ஆதாரமாக, இந்த நிகழ்வு குறித்து பெரியார் பேசிய ஆடியோவையும் பரப்பி வருகிறார்கள். பெரியார் ராமரை செருப்பால் அடிப்பது போலவும், அதை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கைத் தட்டி சிரிப்பது போலவும் வெளியிடப்பட்ட கருத்துப் படத்தை எதிர்த்து நீதி மன்றம் சென்றதாகவும், அதை வெளியிட்ட இந்து உள்ளிட்ட ஏடுகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதாகவும் பெரியார் தரப்பினரின் வாதமாக உள்ளது.

எனவே, ரஜினிகாந்த் மன்னிப்பு கோரவேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த், “மன்னிப்பு கேட்க முடியாது. நடந்தவைகள் உண்மை. அதைத் தான் சொன்னேன்” என்று கூறியுள்ளார். இது மறுக்க முடியாத ஆனால் மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“நல்லதே செய்வோம், நல்லதே பேசுவோம், நல்லதே நினைப்போம்,  நல்லதே நடக்கும்” – இதைத் தான் தனது அரசியல் தாரக மந்திரமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ”நேர்மறையாக மட்டுமே சிந்திப்பேன், செயல்படுவேன். எதிர்க்கட்சியினரின் கடந்த காலம் பற்றி குறை கூற மாட்டேன். நான் என்ன செய்வேன் என்று மக்களிடம் கூறி வாக்கு கேட்பேன்” என்பது தான் அவர் இதுவரையிலும் சொல்லி வந்த அரசியல் பாதையாக இருந்தது.

தற்போது 1971ல் நடந்த ஒரு சம்பவத்தை, அதுவும் அவர் தமிழ்நாட்டிலேயே இல்லாத போது, அவருக்கு தமிழ் மொழி தெரியாத நேரத்தில் நடந்தவைகளை ஆணித்தரமாக கூறி, அதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக 2017ல் வெளிவந்த அவுட்லுக் இதழின் கட்டுரையை காட்டியுள்ளார். கார்ட்டுனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளியான இந்தக் கட்டுரையில் சோ சொன்னதாக கட்டுரையாளர் கூறியுள்ளார். இது ஆதாரமா என்று பதில் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.

வாட்ஸ் அப் தலைமுறையினருக்கு தெரியாத ஒன்றை தெரியப்படுத்தி விட்டு, அது மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்றும் சொல்கிறார் ரஜினிகாந்த். ஒன்று ரஜினிகாந்த் சொன்னதைப் போல் ராமருக்கும், சீதைக்கும் செருப்பு மாலை அணிந்து ஊர்வலம் நடந்திருக்க வேண்டும். அல்லது பெரியாரே கூறியது போல் ஜனசங் கட்சியினர் வீசிய செருப்பை எடுத்து தி.க தொண்டர்கள் ராமர் படத்தை அடித்து இருக்க வேண்டும்.  இரண்டில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்றும் கூறும் ரஜினிகாந்த், அதை சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர் நினைவு கூர்ந்தது சாட்சாத்  ரஜினி தான் என்பதை மறுக்க முடியுமா? இது முன்னுக்குப் பின் முரண் இல்லையா?. பாஜகவினர் இதைச் செய்திருந்தால் ஆச்சரியமில்லை. 

தமிழ்நாட்டில், எப்போவோ நடந்த ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவு படுத்தி ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்துவது தான் “ நல்லதே செய்வோம், நல்லதே பேசுவோம்” என்று அர்த்தம் ஆகுமா?  கட்சி ஆரம்பிப்பதற்குள்ளாகவே தடம் மாறுகிறாரா மிஸ்டர். ரஜினிகாந்த்.

– சாரல் மணி

http://A1TamilNews.com

From around the web