சீன அதிபருக்கு பிரதமர் மோடி விருந்து.. ரஜினிக்கு அழைப்பு!

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் க்கு பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. அக்டோபர் 11, 12ம் தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங்க்கு சிறப்பு விருந்து அளிக்கவும் ஏற்பாடு
 

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் க்கு பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

அக்டோபர் 11, 12ம் தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங்க்கு சிறப்பு விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் முக்கிய தலைவர்கள் பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சீன அதிபர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கலந்து கொள்வதாகவும்  தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் 2.0 படம் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது.

– வணக்கம் இந்தியா

 

 

 

From around the web