ரஜினிகாந்த் இந்து தேசியவாதியா? அப்படின்னா!

இந்த டிவியிலே விவாதம்ன்னு பண்ணிகிட்டு இருக்காய்ங்களே, அவங்க பேசுற கட்சிக்கு அவங்களால 10 ஓட்டு கொண்டு வரமுடியுமா? கட்சிக்காரங்களை இந்த கணக்குலே சேக்காதீங்க. விமர்சகர், சமூக ஆர்வலர் அப்படின்னு பேர வச்சிகிட்டு வந்து பேசுறாங்களே அவங்களைச் சொன்னேனுங்க. இவிங்க பேசுறத நம்மூரு டீக்கடையிலே பேசுவாய்ங்க பாருங்க. சும்மா சூப்பரா இருக்கும். நம்ம ஊரு, தெரு மேட்டரையும் சேத்துப் போட்டு தாக்குவாங்கய்ங்க பாருங்க. கேக்க செம்ம்ய்யா இருக்கும். தெரு லைட் போட்டது, ரோடு போட்டது, கம்மாய் தூர் வாருனதுன்னு உள்ளூர்
 

ரஜினிகாந்த் இந்து தேசியவாதியா? அப்படின்னா!

ந்த டிவியிலே விவாதம்ன்னு பண்ணிகிட்டு இருக்காய்ங்களே, அவங்க பேசுற கட்சிக்கு  அவங்களால 10 ஓட்டு கொண்டு வரமுடியுமா? கட்சிக்காரங்களை இந்த கணக்குலே சேக்காதீங்க. விமர்சகர், சமூக ஆர்வலர் அப்படின்னு  பேர வச்சிகிட்டு வந்து பேசுறாங்களே அவங்களைச் சொன்னேனுங்க.

இவிங்க பேசுறத  நம்மூரு டீக்கடையிலே பேசுவாய்ங்க பாருங்க. சும்மா சூப்பரா இருக்கும். நம்ம ஊரு, தெரு  மேட்டரையும் சேத்துப் போட்டு தாக்குவாங்கய்ங்க பாருங்க. கேக்க செம்ம்ய்யா இருக்கும். தெரு லைட் போட்டது, ரோடு போட்டது, கம்மாய் தூர் வாருனதுன்னு உள்ளூர் மேட்டரை எல்லாம் சேத்துப் போட்டு அலசுவாய்ங்க.

நம்மூருக்கு யாரு என்ன செஞ்சாய்ங்க்கங்கிறதும் தெரிய வரும். இங்க பேசுன மேட்டர அதே சூட்டோட்ட, அப்படியே ஊட்டுக்குப் போய் அவிங்கவிங்க பொண்டாட்டி புள்ளைங்க கிட்டே கூட கொட்டுவாய்ங்க. பக்கத்து வீட்லே பேசுறத அப்படியே நம்மூட்டு அம்மணிங்க காதுலே வந்து அக்காமாரு வந்து பேசுவாய்ங்க பாருங்க. ஊட்டம்மா நம்மகிட்டே வந்து டவுட் கேப்பாக. 

ஆனா பாருங்க, டிவி அரசியல் விவாதத்தை நம்மூட்டு அம்மணிங்க பாக்குறதே இல்லீங்க. பெருசுங்க கிட்ட கேட்டுப் பாத்தா, என்னோமோ யாக்கியானம் பேசுறாய்ங்கப்பு. ஒன்னும் பெருசா புரியறதுல்ல. கட்சிக்காரங்க கூட மீட்டிங்லே பேசுறமாதிரி பேசமாட்டேங்கிறாங்களப்பு ன்னு நீட்டி முழக்குறாய்ங்க.

நானெல்லாம் அதான் இந்த டிவி பொட்டிப் பக்கம் போய் அரசியல் கேக்குறதுல்லய்ங்க. ஒரு தம்பி வீடியோ ஒன்னு அனுப்பிச்சுங்க. அதில ஒருத்தரு ரஜினிகாந்த் இந்து தேசியவாதின்னு பேசியிருந்தாருய்ங்க.

இந்து தேசியவாதி?

இது என்னய்யா புதுசா இருக்குன்னு பார்த்தா குழப்பம் தான் வருதுங்க. என்னைக்காவது ரஜினி சார் தன்னை ஒரு இந்துன்னு சொல்லியிருக்காரான்னு யோசிச்சி பார்த்தா, அப்படி அவரு எப்பவுமே சொன்னதில்லே. இந்துன்னே சொல்லிக்காத மனுசன இந்து தேசியவாதின்னா, என்னமோ மாதிரி இருக்கே.. இதுல, இந்த மனுசன் என்னமோ ரஜினி சார் பக்கத்திலே உக்காந்து அவருக்கே அரசியல் யோசனை சொன்னவர் மாதிரி வேற அடிச்சு உடுறாருங்க பாருங்க. அப்படியே ஷாக்காயிட்டேன். 

நம்ம ரஜினி சார், எப்போவுமே மத சார்பு இல்லாதவர். 27, 28 வருஷத்துக்கு முன்னாடியே என் சாமிக்கு மதமே கிடையாதுன்னு துணிச்சலாகச் சொன்னவர். சின்ன வயசுப் பழகத்துலே திருநீறு பூசுவதால் இந்து என்று என்னை சொல்லிக்க மாட்டேன்னும் விளக்கம் சொல்லியிருக்காரு. அவரைப் போய் இந்து தேசியவியாதி ஸாரி, இந்து தேசியவாதி ன்னு என்னத்துக்கு முத்திரை குத்தனும் சொல்லுங்க? எல்லாம் அவிங்களோட விட்டகுறை தொட்டகுறையாத்தானே இருக்கனும்.

யாரு சிபாரிசிலயோ ரஜினி சார் கிட்டே போய் போட்டோ எடுத்துட்டு வந்துட்டா, அவருக்கே அரசியல் அட்வைசர் ஆக முடியுமா என்ன?. ரஜினி  ரசிகப் பெரு மக்களே, படம் போட்டுக்காட்டிப் பேசுவாய்ங்க. டிவி பொட்டியிலே வந்து பேசுவாய்ங்க. இவங்களை எல்லாம் நம்பாதீங்க. ரஜினி சார் சொல்றத மட்டுமே நம்புங்க. ஏன்னா அவர் உண்மை மட்டும் பேசுவார். இவிங்க  சொந்த சரக்கை மிக்ஸ் பண்ணிப் பேசுவாய்ங்க.

30, 40 வருசமா எந்த பலனும் பாக்காம ஊருக்குள்ளே நற்பணி மன்றம் நடத்துறாய்ங்க பாருங்க… அவிங்க பண்ற விசயத்தை சோசியல் மீடியால ஷேர் பண்ணுங்க. அவிங்க ஓட்டுக் கேட்டு போனாக்க, அக்கம் பக்கம் இருக்கிறவய்ங்க எல்லாம் ஏற்கனவே ஓட்டுப் போடுற கட்சியை மாத்திக் கூட ஓட்டு போடுவாய்ங்க.  அவிங்கள கொண்டாடுங்க சோசியல் மீடியா ரசிகர்களே.

– ‘ரைட்’ பாண்டியன்

From around the web