ஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா?

கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சுயசார்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முதலீடுகளின் மூலமே வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வேலை வாய்ப்பின் மூலமே உற்பத்தி பெருகி பொருளாதாரம் உயரும். மேலும் ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும் மத்திய
 

ஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா?கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சுயசார்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முதலீடுகளின் மூலமே வேலை வாய்ப்புக்கள்  உருவாகும். வேலை வாய்ப்பின் மூலமே உற்பத்தி பெருகி பொருளாதாரம் உயரும்.

மேலும் ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும் மத்திய  அரசு திட்டமிட்டு வருகிறது. அதிக அளவில் உற்பத்தியைப் பெருக்க வழிகாட்டுதல்கள் குழுக்களையும் உருவாக்கி வருகிறது. 

விவசாயிகளே விளைப்பொருட்களுக்கு விலையை  நிர்ணயித்துக் கொள்ளலாம். விவசாய விளை பொருட்களை இந்தியாவிற்குள் எந்த மாநிலத்திலும் விற்க  தடையின்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்

அரசியலமைப்புச் சட்டத்தின் படி உணவுத் துறை மாநில அரசுகளின் கட்டுபாட்டில் உள்ள விவகாரம்.  மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்றியுள்ளார்கள். இது முரணானது, சட்ட விரோதமானது என்று கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாக, எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

ஒரே தேசம் ஒரே சந்தை திட்டத்தின் மூலம் விவசாயப்  பொருட்களை இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், இது யூக வர்த்தகத்திற்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கும் தான் இடமளிக்கும். தரகர்களாலும், முதலீட்டாளர்களாலும் விலை பன்மடங்கு உயரும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாட்டில் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளையே தரும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

A1TamilNews.com

 

From around the web