நடிகை குஷ்புவுக்கு மன அழுத்தமா? கட்சித் தாவ தயாராகிறாரா?

கிராம, நகர, கிளை எதிலும் கட்சி உறுப்பினராக இல்லாமலே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவிக்கு போனவர் நடிகை குஷ்பூ. கட்சி அமைப்பை அடியோடு மாற்றவேண்டும் என்று யோசனை கூறியவர். தற்போது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை வரவேற்றுள்ளார். அதுபற்றி கவனமாக கட்சி கருத்து வெளியிட வேண்டும் என அரங்கினுள் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர் அஹமது படேல் தெரிவித்துள்ளார் .காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கின்றன. வெறும் தலையாட்டி பொம்மை,
 

நடிகை குஷ்புவுக்கு மன அழுத்தமா? கட்சித் தாவ தயாராகிறாரா?கிராம, நகர, கிளை எதிலும் கட்சி உறுப்பினராக இல்லாமலே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவிக்கு போனவர் நடிகை குஷ்பூ. கட்சி அமைப்பை அடியோடு மாற்றவேண்டும் என்று யோசனை கூறியவர்.

தற்போது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை வரவேற்றுள்ளார். அதுபற்றி கவனமாக கட்சி கருத்து வெளியிட வேண்டும் என அரங்கினுள் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர் அஹமது படேல் தெரிவித்துள்ளார் .காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கின்றன. 

வெறும் தலையாட்டி பொம்மை, ரோபோட் போல இருக்க நான் விரும்பவில்லை. எல்லா கருத்துக்களும் தலைவருடன் இசைவாக இருக்கவேண்டியதில்லை. ஒரு குடிமகனாக தைரியமாக சொந்தக் கருத்தை வெளியிட வேண்டும். என் கருத்து கட்சிக்கு மாறுபட்டு இருக்கலாம். சுயசிந்தனை உள்ள ஒரு தனி நபர் நான். ஆங்கிலத்தில் கற்பதை விட தாய் மொழியில் கற்பது நல்லது தான் என குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். 

கட்சி அரங்கினுள் எப்படி வேண்டுமானாலும் விவாதிக்கலாம். பொதுவில் பகிரங்கமாக விவாதிப்பது கட்சிவிரோத நடவடிக்கை என மாநில காங்கிரஸ் தலைவர் கே,எஸ். அழகிரி எச்சரித்துள்ளார்.  மனஅழுத்தமே கட்டுப்பாடு மீறலுக்கு காரணம். அவர் யோகா பயிற்சி  எடுக்கலாம் என்று ஆலோசனையும் கூறியுள்ளார் அழகிரி. 

காரியக்கமிட்டிக்கு பாராசூட்டில் கொண்டுவந்து ஆட்களை இறக்காதீர்கள் என காங்கிரஸ் ராஜ்யசபா எம்பிக்கள்  கூட்டத்தில் ஒரு எம்பி. பேசினார். அது சரி தான்  என நடிகை  குஷ்பூ நிரூபித்துவிட்டார். இயல்பாக கட்சிக்காரர் தன் கட்சியை பகிரங்கமாக வெளியில் குற்றம் சாட்டிப் பேச  மாட்டார். 

கட்சி வரலாறு தெரியாமல் சிபாரிசு மூலம் பதவிக்கு வருபவர்கள்  கட்டுப்பாடு அனுசரிக்க மாட்டார்கள். பிரச்சாரத்துக்கு மட்டும் தகுதியானவர்கள் கட்சி நிர்வாகியானால் நிலைமை இது தான். குஷ்பூவை மாநில தலைவர் நீக்கவும் முடியாது, பிறகு எப்படி அவர் மாநில தலைமைக்கு கட்டுப்படுவார்? 

குஷ்பூ பெரிய மக்கள் தலைவரும் அல்ல. வாக்குவங்கியும் அவரிடம் இல்லை. மாநில தலைமைக்கு அதிகாரம் இருந்தால் தான் கட்சி கட்டுப்பாடு நிலைநாட்ட முடியும். 

– வி.எச்.கே.ஹரிஹரன் 

 

From around the web