ரஜினிக்கு ஆதரவு கிடையாது!! மீண்டும் காங்கிரஸுக்கு தாவும் கராத்தே தியாகராஜன்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் தீவிர ரஜினி ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசி ரஜினிக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக செயல்பட்டார். கொரோனாவுக்கு முன்னதாக லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினிகாந்த் பேட்டி அளித்த பிறகு கராத்தே தியாகராஜனுக்கு ரஜினியின் முடிவு ஏற்புடையதாக இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் ரஜினிக்கு ஆதரவாக இருக்கும் தேர்ந்த அரசியல்வாதிகள் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக ரஜினி முன்னிலைப்படுத்துவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ரஜினியின்
 

ரஜினிக்கு ஆதரவு கிடையாது!!  மீண்டும் காங்கிரஸுக்கு தாவும் கராத்தே தியாகராஜன்!காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் தீவிர ரஜினி ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசி ரஜினிக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக செயல்பட்டார்.

கொரோனாவுக்கு முன்னதாக லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினிகாந்த் பேட்டி அளித்த பிறகு கராத்தே தியாகராஜனுக்கு ரஜினியின் முடிவு ஏற்புடையதாக இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் ரஜினிக்கு ஆதரவாக இருக்கும் தேர்ந்த அரசியல்வாதிகள் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக ரஜினி முன்னிலைப்படுத்துவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

ரஜினியின் அந்த பேட்டிக்குப் பிறகு அதை நியாயப்படுத்தியோ ரஜினிக்கு ஆதரவாகவோ தொலைக்காட்சி விவாதங்களிலும் கராத்தே தியாகராஜன் பங்கேற்கவில்லை. கொரோனாவும் வந்து விட்டதால் கவனமும் முற்றிலுமாக மாறிவிட்டது. 

இந்தக் காலக்கட்டத்தில் டாக்டர் அம்பேத்கர், கலைஞர் கருணாநிதி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி பிறந்தநாள்களுக்கு தன்னுடைய ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். கருணாநிதி, ராஜீவ், ராகுலுடன் இருக்கும் படங்களையும் பதிவிட்டு இந்திரா காந்தி குடும்பத்திற்கு தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தங்கள் இருவருக்குமான நட்பை வெளிப்படுத்திய கராத்தே தியாகராஜன், திமுக தலைவர் ஸ்டாலினின் கொரோனா குற்றச்சாட்டுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளார். திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து இன்னும் மாறவில்லை என்பதை தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்.

அதே வேளையில், கொரோனா காலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பற்றிய ட்வீட்கள் சிலவற்றை ரீட்வீட் செய்துள்ளார் கராத்தே தியாகராஜன். ரஜினி மக்கள் மன்றம் தொடர்பான  நிவாரணப் பணிகள் குறித்த ட்வீட்களையும் ரீட்வீட் செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியையும் ரிட்வீட் செய்துள்ளார் கராத்தே தியாகராஜன். மேலும் அமா சபை தலைவர்,,செயலாளாருக்குரஜினிகாந்த் தொலைபேசியில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்ததாக செயலாளர் இல்யாஸின் ட்வீட்டை ஷேர் செய்து தந்தி தொலைக்காட்சி, நியூஸ்18, புதியதலைமுறை, எஎன்ஐ செய்தி நிறுவனங்களுக்கு டேக் செய்துள்ளார்.

தமிழக அரசை பாராட்டி முதலில் ரஜினி வெளியிட்டுருந்த ட்வீட்-ஐ ரீட்வீட் செய்த கராத்தே தியாகராஜன், பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று மெழுகுவர்த்தி ஏந்திய படத்துடனான ரஜினியின் ட்வீட்டையும், டாஸ்மாக் திறப்பது குறித்து ரஜினி வெளியிட்ட ட்வீட்டையும் ரிட்வீட் செய்யாமல் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

கொரோனா விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பு ப.சிதம்பரத்தின் ட்வீட்களை ரீட்வீட் செய்த கராத்தே தியாகராஜன், பாஜக, அதிமுக ஆதரவான ரஜினியின் ட்வீட்களை சாமர்த்தியமாக தவிர்த்துள்ளது, அவருடைய காங்கிரஸ் பாசத்தையும் பாஜக எதிர்ப்பையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

ரஜினியின் டாஸ்மாக் ட்வீட்டை தன்னுடைய பெயரில் சமூகத்தளங்களில் போலிக்கணக்கில் ரீட்வீட் செய்துள்ளதாக மு.க.அழகிரி நேரில் சென்று சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தது குறிப்பிடத் தக்கது. தீவிர ரஜினி ஆதரவாளராக அறியப்பட்ட மு.க.அழகிரி, கராத்தே தியாகராஜன் இருவருமே ரஜினியின் டாஸ்மாக் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ரஜினி என்ன செய்தாலும் அவருடைய அரசியலுக்கு நாங்கள் ஆதரவு தரப்போவதில்லை என்பதை இருவருமே சுட்டிக் காட்டியுள்ளதாகத் தான் கருத வேண்டியுள்ளது. ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லையென்றால் தோல்வி உறுதி என்று வெளிப்படையாகவே பேசி விட்டார் தமிழருவி மணியன்.

மூத்த அரசியல் தலைவர்களான இந்த மூவருமே ரஜினியின் சமீபத்திய “எழுச்சி அரசியல்”-க்கு தங்கள் ஆதரவு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டனர். கராத்தே தியாகராஜனின் தீவிர காங்கிரஸ் பாசம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ப.சிதம்பரத்தின் ஆதரவுடன் அவர் காங்கிரஸுக்கே திரும்புவார் என்பதை கோடிட்டு காட்டுவதாகவே உள்ளது.

கொரோனா நெருக்கடியில் ரஜினியின் எழுச்சி அரசியலும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்பதாகவே தெரிகிறது. ரஜினி திடீரென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசியதும் கவனிக்கத் தக்கது!

இன்னும் நீண்ட அரசியல் பயணம் செய்ய வேண்டிய கராத்தே தியாகராஜன், ரஜினியை மட்டும் நம்பி தன்னுடைய அரசியலுக்கு முடிவு கட்டிக் கொள்ளப் போவதில்லை என்றே தெரிகிறது.

– மணி

A1TamilNews.com

From around the web