இந்தியாவில் எந்த ஊடகத்திற்காவது இந்த ‘தில்’ இருக்கா?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்வீட்டுக்கு சிஎன்என் தொலைக்காட்சி கொடுத்த பதில் ட்வீட் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் ட்ரம்ப், ”சின்என்என் ஐ விட, ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அமெரிக்காவுக்கு வெளியே சின்என்என் பொய்ச்செய்திகளுக்கு மிகப் பெரிய மூல காரணமாக இருக்கிறது. அமெரிக்காவைப் பற்றி மிகவும் மோசமான கண்ணோட்டத்துடன் அவர்கள் செய்தி வெளியிடுகிறார்கள். அவர்களிடமிருந்து அமெரிக்கா பற்றிய சரியான தகவல்களை உலகத்தினர் தெரிந்து கொள்ள முடியவில்லை,” என்று ட்விட்டியுள்ளார். அதற்குப்
 

இந்தியாவில் எந்த ஊடகத்திற்காவது இந்த ‘தில்’ இருக்கா?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்வீட்டுக்கு சிஎன்என் தொலைக்காட்சி கொடுத்த பதில் ட்வீட் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் ட்ரம்ப், ”சின்என்என் ஐ விட, ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அமெரிக்காவுக்கு வெளியே சின்என்என் பொய்ச்செய்திகளுக்கு மிகப் பெரிய மூல காரணமாக இருக்கிறது. அமெரிக்காவைப் பற்றி மிகவும் மோசமான கண்ணோட்டத்துடன் அவர்கள் செய்தி வெளியிடுகிறார்கள். அவர்களிடமிருந்து அமெரிக்கா பற்றிய சரியான தகவல்களை உலகத்தினர் தெரிந்து கொள்ள முடியவில்லை,” என்று ட்விட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த சிஎன்என், ”அமெரிக்காவை பற்றிய கண்ணோட்டத்தை உலகத்திற்கு கொண்டு செல்வது எங்கள் வேலை அல்ல. அது உங்கள் வேலை. செய்திகளை வெளியிடுவது மட்டும் தான் எங்கள் வேலை,” என்று ட்ரம்புக்கு பதில் ட்வீட் செய்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அங்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். சிஎன்என் க்கு ஆதரவாகவும், ட்ரம்புக்கு ஆதரவாகவும் ட்வீட்கள் குவிந்து வருகின்றன.

இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமாகவது இப்படி துணிச்சலாக பதிலடி கொடுக்க முன் வருமா? சில உரிமைகளும் துணிச்சலும், அமெரிக்க ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம் போல் தெரிகிறது!

 

From around the web