அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை?

ஒன்பது ஆண்டுகள் கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கரூரைச் சேர்ந்த அண்ணாமலை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அமித் ஷா, மோடியை சந்தித்தித்தாகவும் உடனடியாக பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சராகப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. அரசியலில் இறங்குவேன் என்பதைச் சொன்ன அண்ணாமலை பாஜகவில் சேர்வது குறித்து மழுப்பலான பதில்களையேச் சொன்னார். கர்நாடகாவில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற காவல்துறை அதிகாரியாக பெயர் எடுத்திருந்த அண்ணாமலையை அம்மாநில மக்கள் “கர்நாடகா சிங்கம்” என்றே
 

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை?ஒன்பது ஆண்டுகள் கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கரூரைச் சேர்ந்த அண்ணாமலை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

அமித் ஷா, மோடியை சந்தித்தித்தாகவும் உடனடியாக பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சராகப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. அரசியலில் இறங்குவேன் என்பதைச் சொன்ன அண்ணாமலை பாஜகவில் சேர்வது குறித்து மழுப்பலான பதில்களையேச் சொன்னார்.

கர்நாடகாவில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற காவல்துறை அதிகாரியாக பெயர் எடுத்திருந்த அண்ணாமலையை அம்மாநில மக்கள் “கர்நாடகா சிங்கம்” என்றே அன்புடன் அழைக்கத் தொடங்கினார்கள்.

தன்னுடைய பிரிவு உபச்சார நிகழ்வில் பேசிய அண்ணாமலை, காவிரி பிரச்சனையில் கூட என்னை வேறுபடுத்திப் பார்க்காமல் கன்னடராக ஏற்றுக் கொண்ட மக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இறுதி வரையிலும் பெருமைமிக்க கன்னடராக இருப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மார்ச் மாதம் திடீரென்று பத்திரிக்கையாளர்களை அழைத்த ரஜினிகாந்த், தான் முதலமைச்சர் ஆக மாட்டேன். படித்த அதிகாரிகளில் ஒருவர் முதலமைச்சராக இருப்பார் என்று தன்னுடைய அரசியல் திட்டத்தைத் தெரிவித்தார். கொரோனா காரணமாக அவருடைய அறிவிப்பு அப்படியே முடங்கிப் போய்விட்டது.

தற்சார்பு விவசாயம் என்ற முழக்கத்தோடு தமிழக ஊடகங்களில் பேட்டி அளிக்கத் தொடங்கிய அண்ணாமலைக்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கியது. அவருடைய முந்தைய, சமீபத்திய பேச்சுக்களை பாஜகவுடன் தொடர்புபடுத்தி, பேசத் தொடங்கினார்கள்.

இனியும் தனித்து இயங்க வேண்டாம், முறைப்படி பாஜகவில் இணைந்தே செயல்படலாம் என அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே வந்த பிறகு, அவர் முன்னிலையில் பாஜகவில் இணையப் போகிறார் அண்ணாமலை என்று அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் உலவுகிறது.

பாஜக தலைமையில் தான் கூட்டணி, பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று பாஜகவில் சமிபத்தில் சேர்ந்துள்ள வி.பி.துரைசாமி கூறியுள்ளதைப் பார்த்தால் அண்ணாமலை பாஜகவில் சேருவது உறுதியாகிவிட்டதோ என்றே தோன்றுகிறது.

ஒருவேளை பாஜகவில் அண்ணாமலை அடைக்கலமாகிவிட்டால், ரஜினி கட்சி தொடக்கம்  முதலமைச்சர் வேட்பாளர் யார்? போன்ற கேள்விகளும் சேர்ந்தே எழுகிறது.

A1TamilNews.com

 

From around the web