கவிஞர் நா.முத்துக்குமாரை பார்க்க ஓடோடி வந்த “இருட்டுக்கடை அல்வா” அதிபர் ஹரிசிங்!! ஏன் தெரியுமா?

மறைந்த திருநெல்வேலி “இருட்டுக்கடை அல்வா” அதிபர் ஹரிசிங், கவிஞர் நா.முத்துக்குமாரை பார்க்க சென்னைக்கு வந்து, சந்தித்த அனுபவம் குறித்து தெரிய வந்துள்ளது. திருநெல்வேலி என்றால் தாமிரபரணி ஆறு, நெல்லையப்பர் கோவில் ஆகிய இரண்டும் தான் எல்லோருக்கும் பொதுவாக நினைவுக்கும் வரும் விஷயமாகும். அடுத்ததாக திருநெல்வேலிக்கு பெயர் பெற்றுத் தந்தது ”அல்வா” தான். அதிலும் இருட்டுக்கடை அல்வா தான் ஒரிஜினில். மூன்றாவது தலைமுறையாக நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே சிறிய கடையில் அல்வா, தயாரித்து விற்பனை செய்யும் ஹரிசிங், டெல்லியில்
 

கவிஞர் நா.முத்துக்குமாரை பார்க்க ஓடோடி வந்த “இருட்டுக்கடை அல்வா” அதிபர் ஹரிசிங்!! ஏன் தெரியுமா?றைந்த திருநெல்வேலி “இருட்டுக்கடை அல்வா” அதிபர் ஹரிசிங், கவிஞர் நா.முத்துக்குமாரை பார்க்க சென்னைக்கு வந்து, சந்தித்த அனுபவம் குறித்து தெரிய வந்துள்ளது.

திருநெல்வேலி என்றால் தாமிரபரணி ஆறு, நெல்லையப்பர் கோவில் ஆகிய இரண்டும் தான் எல்லோருக்கும் பொதுவாக நினைவுக்கும் வரும் விஷயமாகும். அடுத்ததாக திருநெல்வேலிக்கு பெயர் பெற்றுத் தந்தது ”அல்வா” தான். அதிலும் இருட்டுக்கடை அல்வா தான் ஒரிஜினில். 

மூன்றாவது தலைமுறையாக நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே சிறிய கடையில் அல்வா, தயாரித்து விற்பனை செய்யும் ஹரிசிங், டெல்லியில் ஒரு கிளை தொடங்கியதாகவும், அங்குள்ள தண்ணீர் தாமிரபரணி தண்ணீர் போல் இல்லை என்பதால் பக்குவம் வரவில்லை என்று கடையை மூடிவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. 

பலரும் இருட்டுக்கடை என்ற பெயரை உபயோகிக்கத் தொடங்கியதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காப்புரிமையும் பெற்றார் ஹரிசிங். இந்த நிலையில் திருநெல்வேலியில் நடப்பதாக சாமி படத்தை இயக்கினார் ஹரி. ஆறுச்சாமியாக விக்ரம் நடித்த இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

படத்தின் தொடக்கப் பாடலை கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். திருநெல்வேலி அல்வா டா என்று தொடங்கும்  இந்தப்பாடலில் நெல்லையப்பர், காந்திமதி பெயர்களுடன் “இருட்டுக்கடை அல்வா” என்றும் இருக்கும். இந்தப் பாடல் மூலம் இருட்டுக்கடை அல்வா பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொண்டார்கள்.

கவிஞர் நா.முத்துக்குமாரை பார்க்க ஓடோடி வந்த “இருட்டுக்கடை அல்வா” அதிபர் ஹரிசிங்!! ஏன் தெரியுமா?

மிகவும் மகிழ்ந்து போன இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரிசிங் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று கவிஞர் நா.முத்துக்குமாரை சந்திக்கப் போனார். வரவேற்றுப் பேசிய கவிஞரிடம், இருட்டுக்கடை தொடங்கப்பட்ட வரலாறு, அல்வாவின் ஸ்பெஷல் பற்றியெல்லாம் பேசிவிட்டு, அன்பளிப்பாக பணமுடிச்சு தருவதற்கு எழுந்துள்ளார்.

கவிஞர் முத்துக்குமார், அதைத் தடுத்து விட்டு, படத்திற்குப் பாட்டெழுதினேன், அவர்கள் பணம் தந்து விட்டார்கள். வேறு பணம் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுத்து விட்டார். எங்கள் கடையை உலகறியச் செய்து விட்டீர்கள், ஒரு ரசிகனின் அன்பளிப்பாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஹரிசிங்.

உங்கள் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கொண்டு வந்திருக்கும் அல்வா பாக்கெட்டில் இரண்டு எடுத்துக் கொள்கிறேன். தயவு செய்து பணத்தை உள்ளே வையுங்கள் என்று கூறிவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார். நெகிழ்ந்து போய் நெல்லைக்குத் திரும்பியுள்ளார் ஹரிசிங்.

 

From around the web