ஐபிஎல் இன்று… கொல்கத்தா – ஹைதராபாத், மும்பை – டெல்லி மோதல்!

கொல்கத்தா: 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் -வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆஃப்’
 

கொல்கத்தா: 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் -வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறும். 

போட்டியின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ஹைதராபாத் சன்ரைசர்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 6-ல் ஐதராபாத்தும், 9-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் அடியெடுத்து வைக்கிறது. பெயர் மாற்றத்துக்கு பலன் கிடைக்குமா? என்பது போக போகத் தான் தெரிய வரும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அவற்றில் தலா 11-ல் வெற்றி கண்டுள்ளன.

போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2, தமிழ் மற்றும் விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 
– வணக்கம் இந்தியா

From around the web