ஐபிஎல் ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு ?

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, யாருமில்லா மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள முதல்
 

ஐபிஎல் ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு ?

ரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, யாருமில்லா மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.

வெளிநாடுகளைச் சோந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை ஆகிய அணிகள் மோதவுள்ளன.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, வரும் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கி வரும் மே 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வரும் சனிக்கிழமையன்று, ஐபிஎல் போட்டியின் ஆட்சிக் குழு கூடவுள்ளது.

அந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏப்ரல் 15 வரை அனைத்து சுற்றுலா விசாக்களையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வது சந்தேகமாகியுள்ளது. மேலும் ஓர் இடத்தில் பல ஆயிரம் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் வெளிநாடுகளைச் சோந்த பல வீரா்கள் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆட்டத்தையும் மைதானத்தில் சுமார் ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ பார்வையிட உள்ளனர்.

போட்டிகளைக் காண வரும் யாருக்காவது கரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது மற்றவா்களுக்கும் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளது. இதனால், ஐபிஎல் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஏப்ரல் 15 வரை ஐபிஎல் ஆட்டங்களை நேரில் பார்க்க ரசிகர்களுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. யாருமில்லா மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web