ஐபிஎல் 2019: பரபரப்பான ஆட்டத்தில் முதல் வெற்றியை ருசித்தது மும்பை!

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி மைதானதில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 7-வது லீக் போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48
 

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி மைதானதில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 7-வது லீக் போட்டி இன்று நடந்தது.

இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது.

20 ஓவர்களில் மும்பை அணி  8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்தார்.

188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு அணி ஆடாத தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பார்த்திவ் படேல் 31 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் தந்தார். மறுமுனையில் கேப்டன் கோஹ்லி பொறுப்புடன் ஆடி 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஆனால் இதற்கெல்லாம் அசராமல் தன் பாணியில் வெளுத்து வாங்கினார் டிவில்லியர்ஸ். ஆனாலும் அவரது போராட்டம் வீணானது. பும்ரா மற்றும் மலிங்காவின் கச்சிதமான பந்து வீச்சில் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தது பெங்களூரு.

இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்தது பெங்களூரு. மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

நாளை ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

– வணக்கம் இந்தியா

From around the web