நெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி!

எரிவாயு குழாய் பதிப்பதற்காக நெல்வயல்களுக்குள் அத்துமீறி பொக்லைன் எந்திரம் கொண்டு நெல் பயிர்களை அழித்துள்ள சம்பவத்தால் தூத்துக்குடி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பில் தொழிற்சாலை வரை செல்லும் ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிவாயு குழாய் திட்டம், தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தின் வழியாகச் சென்று, அதைத் தொடர்ந்து குலையன்கரிசல் கிராமத்தின் நஞ்செய் வயல்கள் மற்றும் பொட்டல்காடு, முள்ளக்காடு கிராமங்கள் வழியாக ஸ்பிக் தொழிற்சாலையை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அரசுக்கு சொந்தமான மாற்றுப்பாதையில்
 

நெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி!ரிவாயு குழாய் பதிப்பதற்காக நெல்வயல்களுக்குள் அத்துமீறி பொக்லைன் எந்திரம் கொண்டு நெல் பயிர்களை அழித்துள்ள சம்பவத்தால் தூத்துக்குடி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பில் தொழிற்சாலை வரை செல்லும் ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிவாயு குழாய் திட்டம், தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தின் வழியாகச் சென்று, அதைத் தொடர்ந்து குலையன்கரிசல் கிராமத்தின் நஞ்செய் வயல்கள் மற்றும் பொட்டல்காடு, முள்ளக்காடு கிராமங்கள் வழியாக ஸ்பிக் தொழிற்சாலையை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை அரசுக்கு சொந்தமான மாற்றுப்பாதையில் கொண்டு செல்லுமாறு குலையன்கரில், பொட்டல்காடு கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கிராம சபைக் கூட்டங்களிலும் தொடர்ந்து தீர்மானங்களை இயற்றி வருகிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளார்கள்.

தவிர, சம்மந்தப்பட்ட விவசாயிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடை உத்தரவு வாங்கியுள்ளார்கள். இந்நிலையில், தாமிரபரணி வடக்கு கால்வாய் பாசனமான குலையன்கரிசல் நஞ்செய் நெல்வயல்களில், நெற்பயிர்கள் பச்சைப் பசேலென்று கதிர் வரும் பருவத்தில் உள்ளன.

இரண்டு நாட்களுக்கு முன்னர், எரிவாயு குழு பதிக்கும் ஒப்பந்தக்காரர்கள், ஐ.ஓ.சி நிறுவன அதிகாரிகள் துணையுடன் நெல்வயல்களுக்குள் பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு பயிர்களை அழித்து குழாய் பதிக்க முயன்றுள்ளார்கள். சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை அழித்துள்ளார்கள். சம்பவம் அறிந்த விவசாயிகள் ஒன்று திரண்டு சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். வயல்வெளியில் நின்று கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று விவசாயிகளிடம் சமாதனம் பேசியுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயியான சுந்தரக்கனி அம்மாள் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனுமதி வழங்காத நிலையில், அத்துமீறி நெற்பயிரை நாசம் செய்தவர்கள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி!

இரண்டு நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தொடர் போராட்டம் நடத்த குலையன்கரிசல் கிராம விவசாய சங்கத்தின் சார்பில் தீர்மானம் இயற்றியுள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ் தலைமையில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆஸ்கர் முன்னிலையில் சங்க நிர்வாகிகள் சுபாஷ் செல்வக்குமார், துரை நாடார், குமாஸ்தா நாடார், துரைப்பழம், பால்குட்டி, ஹேம்நாத், ஜெகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தாமிரபரணி வடகால் பாசன விளைநிலப் பகுதியில் அறுவடைக்கு தயார்நிலையில் பொதிப்பட்டத்தில் இருந்த நெற்பயிர்களை, அத்துமீறி நுழைந்து எரிவாயு குழாய் பதிக்க முயன்ற இந்தியன் ஆயில் நிறுவன திட்ட மேலாளர் குருமூர்த்தி, பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட விவசாயி சுந்தரக்கனி அம்மாள் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்து 24 மணி நேரமாகியும் வழக்குப் பதியாமல், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி வழக்கு பதிந்து 14ம் தேதி பிற்பகலுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் 15ம் தேதி பாதிக்கப்பட்ட வயல்வெளியில் விவசாயிகள் ஒன்று திரண்டு, அறப்போராட்டம் நடத்தப்படும்.  அதன் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால் தொடர் போராட்டமாகவும், உண்ணாவிரதப் போராட்டமாகவும்  நடத்தப்படும். சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.

சட்டரீதியாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், விளைநிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து நெற்பயிர்களை அழித்ததால், பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. விவசாய முதலமைச்சர் ஆட்சியில் நெற்பயிர்களுக்கே பாதுகாப்பு இல்லையா என்று பொதுமக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.

https://www.A1TamilNews.com

 

From around the web