பலூன் வழியே இணைய சேவை…புது முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்…

தொழில் நுட்ப வளர்ச்சியில் சர்வதேச அளவில் தினமும் புதுப்புது முயற்சிகள் வெற்றியடைந்து வருகின்றன. இந்த வரிசையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் உலகிலேயே முதன் முறையாக வணிக ரீதியிலான பலூன் வழி இணைய தள சேவை உருவாக்கப்பட்டுள்ளாது. கென்யாவில் பலூன்கள் மூலமாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூனுடன், கென்ய தொலைதொடர்பு நிறுவனம் இணைந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு அதிவிரைவான 4 ஜி சேவையை கொடுக்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளது. கென்யாவில் 2017ல் வீசிய புயல் காற்றால்
 

பலூன் வழியே இணைய சேவை…புது முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்…தொழில் நுட்ப வளர்ச்சியில் சர்வதேச அளவில் தினமும் புதுப்புது முயற்சிகள் வெற்றியடைந்து வருகின்றன. இந்த வரிசையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் உலகிலேயே முதன் முறையாக வணிக ரீதியிலான பலூன் வழி இணைய தள சேவை உருவாக்கப்பட்டுள்ளாது.

கென்யாவில் பலூன்கள் மூலமாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூனுடன், கென்ய தொலைதொடர்பு நிறுவனம் இணைந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு அதிவிரைவான 4 ஜி சேவையை கொடுக்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளது.

கென்யாவில் 2017ல் வீசிய புயல் காற்றால் தொலைத் தொடர்பு சேவை பல இடங்களில் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தற்போது சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இணைய தளம் வழியே இணைக்க பலூன்கள் மற்றும் யு.எஸ் டெலமாக் ஆப்பரேட்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் ஏராளமான மக்கள் பயன் பெற்றுள்ளனர் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் பலூன் மூலம் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web