உரையாடல் வழி கற்பித்தல்- ஒரு ஆசிரியையின் புதிய முயற்சி

ஒரு நாயன்மார் கதையில் இப்படி வரும் : அரசரும் மனைவியும் கோவிலுக்குச் செல்கின்றனர். அங்கே தரையில் இருந்த பூவை அரசி எடுத்து முகர்ந்து பார்க்கிறார். அதைப் பார்த்த கோவில் ஐயர் அவரின் மூக்கை வெட்டி விடுகிறார். அதைக் கண்டு சினங்கொண்ட அரசன் ஐயரை பழிக்காமல் , நியாயப்படி பூவை எடுத்த கையைத்தான் வெட்டி இருக்க வேண்டும் எனச் சொல்லி கையை வெட்டுகிறார். இப்படிப் போகும் கழற்சிங்க நாயனார் கதை. இப்படிப்பட்ட நாயன்மார்களின் கதைகள் குறித்து வகுப்பில் உரையாடல்
 

ரு நாயன்மார் கதையில் இப்படி ‌வரும் : அரசரும்‌ மனைவியும் கோவிலுக்குச் செல்கின்றனர். அங்கே தரையில்‌ இருந்த பூவை அரசி எடுத்து முகர்ந்து பார்க்கிறார். அதைப் பார்த்த கோவில் ஐயர் அவரின் மூக்கை வெட்டி விடுகிறார்.

அதைக் கண்டு சினங்கொண்ட அரசன் ஐயரை பழிக்காமல் , நியாயப்படி பூவை எடுத்த கையைத்தான் வெட்டி இருக்க வேண்டும்‌ எனச் சொல்லி கையை வெட்டுகிறார். இப்படிப் போகும் கழற்சிங்க நாயனார் கதை.

இப்படிப்பட்ட நாயன்மார்களின் கதைகள் குறித்து வகுப்பில் உரையாடல் நிகழ்ந்த போது என் மாணாக்கர்கள் வியப்பு அடையத்தக்க வகையில் கேள்விகளை எழுப்பினர்‌

வகுப்பறையில் எல்லா வித கேள்விகளும் கேட்கலாம். இதை எல்லாம் கேள்விக்கு உட்படுத்தவே கூடாது என்ற விதிகளை என்றுமே நான் வகுப்பது இல்லை. கேள்விகள் எந்த அளவு எழுப்பப்படுகின்றனவோ அந்த அளவு அவர்களை நான்‌ புரிந்து கொள்கிறேன்.

அதே அளவு என்‌ குழந்தைகளும்‌ என்னை புரிந்து கொள்கின்றனர். அதற்கு மேல், செய்திகளுக்குப் பின் உள்ள சமுதாயம் சார்ந்த உண்மைகளை புரிந்து கொள்கிறார்கள்.

கற்பித்தல் முறையில் உரையாடல் வழி கற்றலில் நானும் , மாணாக்கர்களும் சேர்ந்தே வளர்கிறோம். எங்கள் சிந்தனைகளை மேம்படுத்திக் கொள்கிறோம்.

– ஆசிரியை  எஸ். முத்துக்குமாரி, அருப்புக்கோட்டை 

From around the web