இன்சைட்: செவ்வாய் கிரகத்தை ஆராய புதிய செயற்கைக் கோளை அனுப்பியது நாசா!

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மேலும் ஒரு செயற்கைக் கோளை இன்று நாசா விண்ணில் செலுத்தியது. இன்சைட் மார்ஸ் லேன்டர் என்ற இந்த செயற்கைக் கோள், பூமி உள்ளிட்ட திடப் பொருட்களால் கூடிய கிரகங்கள் உருவானது எப்படி? என்பதை செவ்வாய் கிரகத்திலிருந்து ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயலாற்றி, பல்வேறு புதிய தகவல்களை பூமியில் இருக்கும் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வருகிறது.
 

 இன்சைட்: செவ்வாய் கிரகத்தை ஆராய புதிய செயற்கைக் கோளை அனுப்பியது நாசா!

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மேலும் ஒரு செயற்கைக் கோளை இன்று நாசா விண்ணில் செலுத்தியது.

இன்சைட் மார்ஸ் லேன்டர் என்ற இந்த செயற்கைக் கோள், பூமி உள்ளிட்ட திடப் பொருட்களால் கூடிய கிரகங்கள் உருவானது எப்படி? என்பதை செவ்வாய் கிரகத்திலிருந்து ஆய்வு செய்யும்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயலாற்றி, பல்வேறு புதிய தகவல்களை பூமியில் இருக்கும் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வருகிறது.

ஏற்கெனவே நாசா பீனிக்ஸ் லேண்டர், மார்ஸ் க்யூரியாசிட்டி போன்ற செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது. இவற்றில் க்யூரிசிட்டி இன்னும் செவ்வாயிலிருந்து படங்களை அனுப்பி வருகிறது.இன்சைட்: செவ்வாய் கிரகத்தை ஆராய புதிய செயற்கைக் கோளை அனுப்பியது நாசா!

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இருந்தவாறு அதன் அடிப்பகுதி மற்றும் பூமி உள்ளிட்ட திடப்பொருட்களால் கூடிய கிரகங்கள் உருவானது எப்படி? என்பதை ஆய்வு செய்ய ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ என்னும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ திட்டமிட்டது.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமானப்படை தளத்தின் மூன்றாவது முனையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.05 மணியளவில் அட்லஸ் V ராக்கெட் மூலம் ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்ப்பட்டது.

விண்னில் செலுத்திய நான்காவது நிமிடத்தில் ராக்கெட் என்ஜினின் பூஸ்டர் அணைக்கப்பட்டு, அடுத்தபடி நிலையை நோக்கி இந்த செயற்கைகோள் உயரச் சென்று கொண்டுள்ளது.

சுமார் 625 கிலோ எடையுள்ள இந்த ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ செயற்கைக்கோள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் 300 மில்லியன் மைல்கள் பயணித்து செவ்வாய் கிரகத்தின் உள்வட்டப்பாதையை சென்றடையும். பின்னர், அங்கு நிரந்தரமாக நிலைகொண்டு தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, பல தகவல்களை நாசா மையத்துக்கு அனுப்பி வைக்கும்.

 

From around the web