தமிழ்நாடு திரும்ப இந்தோனேசிய தமிழர்கள் கோரிக்கை!

இந்தோனேசியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால், தமிழ்நாடு திரும்ப விரும்புவதாக இந்தோனேசியத் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்தோனேசியாவில் கொரோனோ பாதிப்பு மிகவும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. 400 தமிழ்க் குடும்பங்கள் ஜகார்த்தாவிலும் 30 தமிழ்க் குடும்பங்கள் பாண்டுங் நகரத்திலும் வசிக்கிறார்கள். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்ப விரும்புகிறார்கள். ஆனால் விமானப் போக்குவரத்து நிறுத்தி
 

தமிழ்நாடு திரும்ப இந்தோனேசிய தமிழர்கள் கோரிக்கை!ந்தோனேசியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால், தமிழ்நாடு திரும்ப விரும்புவதாக இந்தோனேசியத் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இந்தோனேசியாவில் கொரோனோ பாதிப்பு மிகவும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. 400 தமிழ்க் குடும்பங்கள் ஜகார்த்தாவிலும் 30 தமிழ்க் குடும்பங்கள் பாண்டுங் நகரத்திலும் வசிக்கிறார்கள். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்ப விரும்புகிறார்கள். ஆனால் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் திரும்பி வர முடியாமல் தவிக்கிறார்கள்.

முதலமைச்சரிடமும், பிரதமரிடமும் பரிந்துரைத்து தமிழ் மக்கள் நாடு திரும்ப விமானப் போக்குவரத்து ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரும்ப இந்தோனேசிய தமிழர்கள் கோரிக்கை!

இந்தக் கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 430 தமிழ் குடும்பங்களை இந்தோனேசியாவிலிருந்து தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்து தருமாறு முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் முன்னதாக கோரிக்கை வைத்தார்களா? அதற்கு பதில் இல்லை என்பதால் திமுக் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்களா என்று தெரியவில்லை.

A1TamilNews.com

From around the web