ஒலிம்பிக்கில் விளையாட 55 இந்தியர்கள் தகுதி!

டோக்யோ ஒலிம்பிக்கில் விளையாட இந்தியாவைச் சேர்ந்த 55 பேர் இதுவரை தகுதி பெற்றுள்ளனர். அடுத்தாண்டு நடைபெறும் டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை வசப்படுத்தும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. டோக்யோ ஒலிம்பிக்கில் விளையாட ஆடவர் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியில் இடம்பெறுபவர்கள் உள்பட 55 இந்தியர்கள் இதுவரை முன்னேறியுள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றதன் மூலம் அவை ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற்றன. வில்வித்தை போட்டியில்,
 

ஒலிம்பிக்கில் விளையாட 55 இந்தியர்கள் தகுதி!டோக்யோ ஒலிம்பிக்கில் விளையாட இந்தியாவைச் சேர்ந்த 55 பேர் இதுவரை தகுதி பெற்றுள்ளனர்.

அடுத்தாண்டு நடைபெறும் டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை வசப்படுத்தும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. டோக்யோ ஒலிம்பிக்கில் விளையாட ஆடவர் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியில் இடம்பெறுபவர்கள் உள்பட 55 இந்தியர்கள் இதுவரை முன்னேறியுள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றதன் மூலம் அவை ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற்றன.

வில்வித்தை போட்டியில், இந்திய Recurve ஆண்கள் அணி டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகாட், பஜ்ராங் புனியா, ரவிக்குமார் தகியா ஆகியோர் டோக்டோ ஒலிம்பிக்கிற்கு செல்கின்றனர். உலகச் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் இளம் வீரர் தீபக் பூனியா ஒலிம்பிக்கில் விளையாடவுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், டோக்யோ ஒலிம்பிக்கில், 20 கிலோமீட்டர் ஓட்டப்பந்தய‌ பிரிவில் கோலோதுன் தோடி இர்ஃபான் விளையாடவுள்ளார். 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வியத்தகு ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் கலப்பு தொடரோட்ட அணிக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. அதேப் போல, அவினாஷ் ஸப்லே, தான் ஒலிம்பிக்கில் களம் காணவுள்ளதை உறுதி செய்து உள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வேட்டையாடும் களமாக துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 10மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்தியா 2 இடங்களை உறுதிசெய்துள்ளது. அஞ்சும், அபுர்வி சாண்டேலா ஆகியோர் உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த இடங்கள் கிடைத்துள்ளன. 10மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் பிரிவிலும், இரு இடங்களை இந்தியா பெற்றுள்ளது. இளம் வீரர் சவுரவ் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் இதை சாத்தியமாக்கியதோடு மட்டுமல்லாமல் பதக்கம் வெல்லும் வீரர்களாகவும் ‌கணிக்கப்பட்டுள்ளனர். 10மீட்டர் ஏர் ரைபில் ஆண்கள் பிரிவில், த‌வ்யான்ஷ்‌சிங் பன்வார் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பையில் வெள்ளி வென்றதன் வாயிலாக அவருக்கு டோக்யோ செல்ல டிக்கெட் கிடைத்துள்ளது. 3 நிலைகள் கொண்ட 50மீட்டர் ரைபிள் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புட்டும், 25மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் ராஹி சர்னோபாத்தும், 10மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் மனு பக்கரும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ‌யாஷாஸ்வினி தேஸ்வால், தீபக்குமார் ஆகியோரும் ஒலிம்பிக்கிற்காக இடங்களை உறுதி செய்துள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web