இந்திய ஒலிம்பிக் குழு பயணத்திற்கு தடை-கொரானோ அச்சுறுத்தல்!

கொரானோ வைரஸ் பீதியால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு தடுப்புமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சீனாவில் துவங்கி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கோவிட் 19 என்ற கொரானோ வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே தடை விதிக்க வேண்டிய சூழலில் உலக நாடுகள் உள்ளன. ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்து வந்தது. தற்போது சென்ற வாரம் கிரீஸில்
 

இந்திய ஒலிம்பிக் குழு பயணத்திற்கு தடை-கொரானோ அச்சுறுத்தல்!கொரானோ வைரஸ் பீதியால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு தடுப்புமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

சீனாவில் துவங்கி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கோவிட் 19 என்ற கொரானோ வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே தடை விதிக்க வேண்டிய சூழலில் உலக நாடுகள் உள்ளன.

ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்து வந்தது. தற்போது சென்ற வாரம் கிரீஸில் பொதுமக்கள் யாரும் பங்கு பெறாமலேயே சென்ற வாரம் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

இந்திய வீரர்களுக்கான பாதுகாப்புகள் மற்றும் முன்னேற்பாடுகளை கவனிக்க இந்திய ஒலிம்பிக் பாதுகாப்பு சோதனைக் குழு ஜப்பான் செல்ல வேண்டியிருந்த பயணத்தை ஒத்தி வைத்துள்ளது.

இதனால் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது குறித்து உயர் மட்ட குழு ஆலோசித்து வருகிறது.

http://www.A1TamilNews.com

From around the web