அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய சாஃப்ட்வேர் எஞ்சினியரும் மகளும் பலி!

ராலே (யு.எஸ்): வார இறுதியில் குடும்பத்துடன் பீச்சுக்குச் சென்ற இந்திய சாஃப்ட்வேர் எஞ்சினியர் கார் விபத்தில் பலியாகி உள்ளார். காரில் இருந்த இரண்டரை வயது மகள் திவிஜாவும் இறந்து விட்டார். மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தின் பால்கி என்ற சிற்றூரைச் சார்ந்தவர் முகேஷ் தேஷ்முக். 37 வயதான முகேஷ் வட கரோலைனாவில் ராலே – கேரி மாநகரப் பகுதியில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு மோனிகா (37) என்ற மனைவியும் திவிஜா என்ற மகளும் உண்டு.
 

அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய சாஃப்ட்வேர் எஞ்சினியரும் மகளும் பலி!ராலே (யு.எஸ்): வார இறுதியில் குடும்பத்துடன் பீச்சுக்குச் சென்ற இந்திய சாஃப்ட்வேர் எஞ்சினியர் கார் விபத்தில் பலியாகி உள்ளார். காரில் இருந்த இரண்டரை வயது மகள் திவிஜாவும் இறந்து விட்டார். 

மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தின் பால்கி என்ற சிற்றூரைச் சார்ந்தவர் முகேஷ் தேஷ்முக். 37 வயதான முகேஷ் வட கரோலைனாவில் ராலே – கேரி மாநகரப் பகுதியில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு மோனிகா (37) என்ற மனைவியும் திவிஜா என்ற மகளும் உண்டு.

சம்பவத்தன்று கேரியிலிருந்து காரில் வில்மிங்டன் நகர பீச்சுக்கு சென்று கொண்டிருந்தார்கள். காரை முகேஷின் மனைவி மோனிகா ஓட்டிக் கொண்டிருந்தார். சாட்பர்ன் நகருக்கருகே யு.எஸ் ஹைவே எண் 74, வட கரோலைனா ஹைவே எண் 410 சந்திப்பில் உள்ள நிறுத்தத்தில் கார் மீது டேங்கர் லாரி மோதியுள்ளது.

முகேஷும் மகள் திவிஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மோனிகாவுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், கணவரையும் மகளையும் ஒரே நேரத்தில் பலி கொடுத்து விட்டு பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.முகேஷின் பெற்றோர் சொந்த ஊரில் வசிக்கிறார்கள்.

முகேஷ் மிகவும் எளிமையானவர், அன்பானவர். அனைவருக்கும் ஓடிச் சென்று உதவுபவர். அவருடைய இழப்பு மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது என்று நண்பர்கள் மிகுந்த துக்கத்துடன் பகிர்ந்துள்ளார்கள்.

சமீபகாலமாக, அமெரிக்க சாலைகளில் இந்திய சாஃப்ட்வேர் எஞ்சினியர்களின் குடும்பங்கள் விபத்துக்குள்ளாகி வருவது அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. டிஃபென்ஸ் ட்ரைவிங் யுத்தியுடன் கூடுதல் கவனத்துடன் காரில் பயணம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

 

From around the web