உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று வருகிறது.இதில் 7 நாடுகளை சேர்ந்த 2700வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் 19 வயது இந்திய வீராங்கனையான மெகுலி கோஷ் 253.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது புதிய உலக சாதனையாகும். துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 252.9 புள்ளிகள் குவித்ததே நடப்பு உலக சாதனையாக உள்ளது.அந்த சாதனையை முறியடித்துள்ளார் மெகுலி கோஷ். இந்திய வீராங்கனைகள்
 

உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனைதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று வருகிறது.இதில் 7 நாடுகளை சேர்ந்த 2700வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் 19 வயது இந்திய வீராங்கனையான மெகுலி கோஷ் 253.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இது புதிய உலக சாதனையாகும்.
துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 252.9 புள்ளிகள் குவித்ததே நடப்பு உலக சாதனையாக உள்ளது.அந்த சாதனையை முறியடித்துள்ளார் மெகுலி கோஷ்.

இந்திய வீராங்கனைகள் ஸ்ரீயங்கா சடாங்கி (250.8 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், ஸ்ரேயா அகர்வால் (227.2 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
அணிகள் பிரிவிலும் இந்தியாவிற்கு வெற்றி வாகையே. தேக்வாண்டோ போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கமும், 3 வெண்கலப்பதக்கமும், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப்பதக்கத்தையும் வென்றது இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்தது.

https://www.A1TamilNews.com

From around the web