அதிர்ச்சி!நேபாளத்தில் இந்திய சேனல்களுக்கு தடை!

இந்திய சீன எல்லையில் மே முதல் வாரம் முதலே பதட்டம் நிலவிய சூழ்நிலையில் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனை கண்டிக்கும் விதத்தில் சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அரசும் இந்தியாவின் சில ஆப்களுக்கு தடை விதித்தது. இந்நிலையில் சீனாவிற்கு தன் ஆதரவை தெரிவித்து வந்த நேபாள அரசு தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தொலைக்காட்சிகளுக்கும் தடை விதித்துள்ளது. இந்தியாவின் நட்பு
 

அதிர்ச்சி!நேபாளத்தில் இந்திய சேனல்களுக்கு  தடை!ந்திய சீன எல்லையில் மே முதல் வாரம் முதலே பதட்டம் நிலவிய சூழ்நிலையில் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனை கண்டிக்கும் விதத்தில் சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அரசும் இந்தியாவின் சில ஆப்களுக்கு தடை விதித்தது.

இந்நிலையில் சீனாவிற்கு தன் ஆதரவை தெரிவித்து வந்த நேபாள அரசு தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தொலைக்காட்சிகளுக்கும் தடை விதித்துள்ளது.

இந்தியாவின் நட்பு நாடான நேபாளம் கடந்த சில நாட்களாகவே இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறது.சீனாவின் ஆணைக்கிணங்க நேபாளம் செயல்பட்டு வருவதாக இந்திய தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டன.

தற்போது இந்த தடையும் சீனாவின் தூண்டுதலின் பேரிலேயே விதிக்கப்பட்டிருக்கிறது என சமூக வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன. நேபாள பிரதமருக்கு ஏற்பட்ட அரசியல் ரீதியான நெருக்கடி காரணமாகவே இந்த திடீர் நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் வாபஸ் பெறப்படும் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

A1TamilNews.com

From around the web