வீடு இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் அமெரிக்க இந்திய வம்சாவளி தம்பதி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் வீடு இல்லாமல் ஆங்காங்கே தெருவில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு இந்திய வம்சாவளி தம்பதியினர் நாள் தோறும் உணவுப் பொட்டலங்கள் வழங்கி வருகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் இந்திய சீக்கிய வம்சாவளியினரான ரவி சிங் மற்றும அவருடைய மனைவி ஜாக்கி இருவரும் “ஷேர் அ மீல்” என்ற பெயருடன் ஒரு உணவு வேன் தயார் செய்துள்ளார்கள். அதன் மூலம் சைவ முறையில் தயாரிக்கப்பட்ட “பரிட்டோ” க்களை லாஸ் ஏஞ்சல்ஸ்
 

வீடு இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் அமெரிக்க இந்திய வம்சாவளி தம்பதி!மெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் வீடு இல்லாமல் ஆங்காங்கே தெருவில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு இந்திய வம்சாவளி தம்பதியினர் நாள் தோறும் உணவுப் பொட்டலங்கள் வழங்கி வருகிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் இந்திய சீக்கிய வம்சாவளியினரான ரவி சிங் மற்றும அவருடைய மனைவி ஜாக்கி இருவரும் “ஷேர் அ மீல்” என்ற பெயருடன் ஒரு உணவு வேன் தயார் செய்துள்ளார்கள். அதன் மூலம் சைவ முறையில் தயாரிக்கப்பட்ட  “பரிட்டோ” க்களை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று, வீடு இல்லாமல் தெருவில் வசிப்பவர்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.

இதற்காக மத்திய சமையலறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். அங்கு ஒவ்வொரு நாளும் மாலை, பல்வேறு இனங்களைச் சார்ந்த  ஒன்று கூடி சோறு, பீன்ஸ் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பரிட்டோ தயார் செய்கிறார்கள். 

மேலும், உணவு வேன் செல்லுமிடங்களில் சூடாகவும் பரிட்டோ தயார் செய்து வினியோகம் செய்யப்படுகிறது. கணவன் – மனைவி இருவரும் தொடங்கிய இந்த சமூகப் பணிக்கு பல்வேறு தரப்பு இந்தியர்கள், அமெரிக்கர்கள் உறுதுணையாக தன்னார்வத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

அமெரிக்காவிலும் ஏழ்மைப் பிடியில் ஏராளமான மக்கள் வீடு இல்லாமல், சரியான வேலை இல்லாமல், குறிப்பாக மாநகரங்களின் தெருவோரம் வசித்து வருகிறார்கள். இரவு தங்குவதற்கு அரசு சார்பில் விடுதிகள் கட்டப்பட்டிருந்தாலும், எல்லோரும் தங்கும் அளவிற்கு இடமில்லாமல் பற்றாக்குறை உள்ளது. மேலும், அந்த விடுதிகளில் போதைப் பொருள் உபயோகிப்பவர்களை அனுமதிப்பதில்லை. வீடு இல்லாமல் போதைப் பழக்கத்திற்கும் அடிமையானவர்கள் நிலை பெரும் திண்டாட்டம் தான்.

ரவிசிங் – ஜாக்கி தம்பதியினர் போல் ஏராளமான தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் இந்த ஏழை அமெரிக்கர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

 

From around the web