2024 தேர்தலில் மோடியை வீழ்த்துவாரா ராகுல் காந்தி? சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டம்!

 
ஊடகங்கள் விவாதிக்க வேண்டியது ‘விஜய் அண்ணா’ சர்காரா ? ‘ரஃபேல்’ மோடி சர்க்காரா?

செவிவழி கேட்டு வாய்வழி கோரஸாக சொல்லி மனனம் செய்தது குருகுல காலம். பேப்பர் பேனா எடுத்து எழுதி கூட்டி பெருக்கி வகுத்து கணக்கு பார்த்தது ஒருகாலம். இன்று எல்லாக்கணக்கும் மொபைல் போன் மூலம் போட்டுச்சொல்லும் தொழில்நுட்ப யுகம்.

அது போல தொண்டர்கள், கொள்கை, செயல்திட்டம், மக்கள்தொடர்பு தியாகம், அர்ப்பணிப்பு . மக்கள் சேவை இவைகள் இல்லாமல் ஆட்சிக்கு ரூட் தேடுவது இந்தக்காலம். இந்தியாவில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவர்களுக்கு அடுத்து தேசிய அளவில் பிரபலமானவர் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.  பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் இவரை முதன்மை செயலாளராக அமர்த்தியுள்ளார். பிரசாந்த் கிஷோரை டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார். உடன் உபி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத்,இருந்தனர்.

இந்த இரு மாநிலங்களும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. பஞ்சாப்  மாநிலத்தில் நவஜோத்சிங் சித்து  குடைச்சல் தந்து கொண்டு இருக்கிறார். அவரை சமாதானம் செய்து உட்கட்சி பூசலை தீர்க்க பிரசாந்த் உதவலாம். உபி மாநிலத்தில் பாஜக, சமாஜ்வாதி கட்சிகள் தான் பிரதானமாக பேசப்படுகின்றன. அந்த மாநிலத்தில் மாயாவதி, அசாசுதீன் ஒவைசி கட்சிகளும் தனித்து நிற்க உள்ளன. உபி மாநிலத்தில் காங்கிரஸ் அமைப்பு ரீதியாக வலுப்பெற வேண்டும்.  பாஜகவுக்கு எதிராக பலமான அணி அமைப்பது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் , தேசியவாதகாங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இருமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

3 வது, 4  வது  எந்த அணி அமைத்தாலும் காங்கிரஸ் பங்களிப்பின்றி பாஜகவை வெல்ல முடியாது என்று பிரசாந்த்  ஏற்கனவே தெரிவித்து விட்டார். காங்கிரசை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.  பாஜவுக்கு எதிரான அணிக்கு தலைமை ஏற்க காங்கிரசை தயார் செய்வது பற்றி ராகுலிடம் பிரசாந்த் ஆலோசனை கூறியதாக தெரிகிறது. ரூட்மேப் மட்டுமே பிரசாந்த் கிஷோர் வரைந்து தருவார்.  அமைப்பு,தொண்டர்கள், நிதிவசதி,கட்டுப்பாடு,தெளிவான செயல் திட்டம், கூட்டணி, ஆளுமை  இருந்தால் பி[ரசாந்த் கிஷோர் வியூகத்தை செயல் படுத்தலாம். வெற்றியும் அடையலாம்

-வி.எச்.கே. ஹரிஹரன்  

From around the web