பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை சந்திக்கிறாரா..?

 
Modi-TNGovernor

பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்கிறார். இந்த சந்திப்பு நாளை மாலை 4 மணிக்கு டெல்லி நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் கொரோனா நிலவரம், 7 பேர் விடுதலை, நீட் மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜூன் 21-ம் தேதி முடிந்து முதல் முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. அந்த கூட்டத்தின் முதல் நாளில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது சில முக்கிய அம்சங்கள் குறித்து பேசியிருந்தார்.

அதாவது வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை, அதன் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை அறிவிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்த அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

From around the web