பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா..? ஒன்றிய அரசு ஆலோசனை

 
Petrol

பெட்ரோல், டீசல் விலையை, ஜிஎஸ்டிக்குள் கொண்டுவராலாமா என்ற ஆலோசனையை, ஒன்றிய அரசு தீவிரப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் வெள்ளிக்கிழமை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்து, ஒன்றிய அரசு முக்கிய முடிவினை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையுடன் ஒன்றிய எக்ஸைஸ் வரி, செஸ் வரி மற்றும் மாநில அரசுகளின் மதிப்புக்கூட்டு வரி ஆகியவை சேர்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை பரிசீலிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு சில மாநில அரசுகள், வரி வருவாய் போய்விடும் என்று ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தை பெற்று பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

From around the web