ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு பரிமாற்றக் கட்டணம் ஆகஸடு முதல் உயர்வா..?

 
ATM

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கான கட்டணம் ஆகஸ்டு மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளது.

ஏடிஎம் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணத்தை 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாகவும், பணமல்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை ஐந்து ரூபாயில் இருந்து ஆறு ரூபாயாகவும் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

இதேபோல் ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைதான் இலவசப் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.

பெருநகரமாக இருந்தால் 3 முறையும், மற்ற பகுதிகளில் 5 முறையும் மட்டுமே மற்ற வங்கிகளில் இலவசப் பரிமாற்றம் செய்ய முடியும். இந்த வரம்புக்கு மேல் உள்ள ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் 20 ரூபாய் என இப்போதுள்ள கட்டணத்தை 2022 ஜனவரி 1 முதல் 21 ரூபாயாக ரிசர்வ் வங்கி உயர்த்த உள்ளது.

From around the web