கேரளாவில் மனைவி 2 மகன்களை வெட்டிக் கொலை... தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்!!

 
Man-kills-himself-after-murdering-wife-children

கேரளாவில் மனைவி 2 மகன்களை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ளது நீலஸ்வரம். இங்கு வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 55). ஆட்டோ டிரைவராக இருந்தார். இவருடைய மனைவி அனிதா (வயது 40). இவர்களது மூத்த மகன் ஆதித்ய ராஜ் (வயது 24). இரண்டாவது மகன் அமிர்தராஜ் (வயது 20).

அமிர்தராஜ் இந்தப் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் மளிகைக்கடைக்கு இன்று காலை பதினோரு மணியாகியும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரை தேடி கடை உரிமையாளர் ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார்.

Man-kills-himself-after-murdering-wife-children

அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று கடை உரிமையாளர் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். முதலில் ராஜேந்திரன் வீட்டின் முன்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார். பின்பு அருகில் மனைவி இரண்டு மகன்ளும் படுகாயங்களுடன் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்கள்.

அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் வெளியே ஓடிவந்து அக்கம்பக்கத்தினரிடம் விவரம் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கொல்லம் மாவட்ட எஸ்பி-க்கு புகார் தெரிவித்தார்கள் அவர் உடனடியாக மற்ற போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

 போலீசார் நடத்திய விசாரணையில் கடன்தொல்லை ஒன்றும் இல்லை என்றும்  கணவர் மனைவி இரண்டு மகன்களையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.

From around the web