18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக போடக்கூடாது? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

 
Supreme Court

18 முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்க கூடாது? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், 18 வயதினர் உட்பட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதும் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு பணம் செலுத்தும் முறையும் கையாள்வது நியாயமற்றதாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை சாடியுள்ளது.

மேலும், 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக போடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம்,  தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடியை எந்தெந்த வகைகளில் அரசு செலவு செய்தது? எனவும் கிராமப்புறங்களில் எத்தனை பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டது?  எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்துவது குறித்த விவரங்களை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து 2 வாரங்களுக்குள் பிரமாணப்பத்திரம்  தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

From around the web