யார் வீட்டுப் பணம்? மக்கள் பணத்தில் மக்களுக்கு இலவச தடுப்பூசி போடுங்கள்! வட இந்திய ஊடகத்தில் பிடிஆர் விளாசல்!

 
PTR

தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வட இந்திய ஊடகங்களிலும் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளிப்படுத்தி வருகிறார்.

பிரபல வட இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பி.டி.ஆர், பொதுமக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப் படவேண்டும். மக்கள் பணத்தில் தான் மாநில, ஒன்றிய அரசுகள் இயங்குகின்றது. மக்கள் பணத்தில்  மக்களுக்குத் தடுப்பூசி போடுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. ஒன்றிய அரசு, மாநில அரசு என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. 

தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டுமா? மாநில அரசு செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, “குறைந்த செலவில் நிறைய தடுப்பூசிகள் கொள்முதல் செய்து, அனைவருக்கும் போடுவதற்கான வழிமுறை எதுவோ அதைத் தான் செய்ய வேண்டும், பிரதமரின் சொத்துக்களிலிருந்து பணம் வரவில்லை. மக்கள் செலுத்தும் வரிப்பணம் தான் மாநில, ஒன்றிய அரசுகளின் வருமானம். எந்த அரசு என்பதை விட மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பது தான் முக்கியமானதாகும்,” என்று கூறியுள்ளார்.

நிதியமைச்சரின் இந்தப் பேச்சு வட இந்தியாவிலும் பரப்பரப்பாகப் பேசப்படுகிறது. சமூக ஊடகங்களில் பி.டி.ஆரின் இந்த பேட்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிடிஆர் ஒன்றிய அரசின் அமைச்சராகப் பணியாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் இதை வழிமொழிந்து, இந்தியாவில் உள்ள திறமையாளர்களை ஒன்றிணத்து ஒன்றிய அரசு( United Government) அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிதியமைச்சர் பி.டி.ஆரின் கருத்துக்களுக்கு வட இந்தியாவிலும் வரவேற்பு கிடைத்து வருவது இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.

From around the web