திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை ஏற்க செய்ய தந்திர நடவடிக்கையில் வாட்ஸ்ஆப்..?

 
வதந்திகளை பரப்புபவர்களே உஷார்! WhatsApp அதிரடி!!

வாட்ஸ்ஆப் பயனாளர்கள் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை ஏற்கச் செய்வதற்காக தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததிலிருந்தே வாட்ஸ்ஆப்பைச் சுற்றிப் பல சர்ச்சைகள் ஆரம்பித்தன. வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய கொள்கையால் பயனாளர்கள் அனுப்பும் செய்திகளின் பாதுகாப்புத் தன்மை, அந்தரங்கம் குறித்து பயனாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.

ஆனால், பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் அனைத்துமே பாதுகாப்பானவை என வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் பயனாளர்களின் தகவல்களை மூன்றாம் நபர் யாரும் படிக்கவோ கேட்கவோ முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனி நபர் சுதந்திர கொள்கைக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது விருப்பத் தேர்வு முறையை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி டெல்லியைச் சேர்ந்த சீமா சிங் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வாட்ஸ்ஆப் நிறுவனம் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளை சுமத்த, தனது பயனர்களிடம் இருந்து தந்திரமாக ஒப்புதலை பெறும்  நடவடிக்கைகளில் வாட்ஸ்ஆப் இறங்கி உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.

இதற்காக புஷ் நோட்டிபிகேஷன்களை பயன்படுத்துவதில் இருந்து வாட்ஸ்ஆப்பை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மத்திய அரசு  கேட்டுக் கொண்டுள்ளது.  தனது தனியுரிமை கொள்கை குறித்து வாட்ஸ்ஆப் தினமும் அறிவிப்பு வழங்குவதாகவும், அது இந்திய காம்பெட்டிஷன் கமிஷனின் உத்தரவுக்கு எதிரானது என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

From around the web