மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு..!

 
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு..!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இங்கு நடந்த வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்க தேர்தலில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் திரிணாமுல் உறுப்பினரும், மமதாவின் நெருங்கிய நண்பருமான சுவேண்டு அதிகாரி போட்டியிட்டார். பாஜக சார்பாக இவர் களமிறக்கப்பட்டார்.

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் சுவேண்டு அதிகாரி குடும்பத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

ஒரு காலத்தில் திரிணாமுல் காங்கிரசில் அதிக அதிகாரம் மிக்க குடும்பமாக அதிகாரியின் குடும்பம் இருந்தது. இப்படிப்பட்ட அதிகாரி குடும்பம் பாஜகவிற்கு தாவியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

அதோடு மமதாவிற்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் சுவேண்டு களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இங்கு சுவேண்டு அதிகாரி 3500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இங்கு முதலில் சுவேண்டு 8997 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

தற்போது மமதா பானர்ஜி இந்த வேறுபாட்டை குறைத்து 3500 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். மாநில முதல்வரே அங்கு பின்னடைவை சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web