பண்டிகை காலங்களில் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்துங்க... மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

 
Crowd

பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

நாடு முழுவதும்  கொரோனா குறைந்துள்ள போதிலும் பண்டிகை காலத்தில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மாநில அரசுக்ளுக்கு ஒன்றிய உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்த வேண்டும். அதேபோல், பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.  

திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா அதிகரிக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web