கட்டுக்கடங்காத கொரோனா... டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!!

 
கட்டுக்கடங்காத கொரோனா... டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!!

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்வதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக டெல்லியில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்த நிலையில் கடந்த 19-ம் தேதி இரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

3-ம் தேதி காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், மே 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  உத்தரவிட்டுள்ளார்.


 

From around the web