மத்திய அமைச்சரின் மகள் கொரோனாவுக்கு பலி!!

 
மத்திய அமைச்சரின் மகள் கொரோனாவுக்கு பலி!!

மத்திய சமூகநலத்துறை அமைச்சர் தவார் கெலாட்டின் மகள் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகி உள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மத்திய அமைச்சர் தவார் கெலாட்டின் மகள் யோகிதா சோலங்கி முதலில் உஜ்ஜைனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நலம் மோசமடைந்ததால், இந்தோரில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  44 வயதாகும் யோகிதா சோலங்கிக்கு கணவரும் 20 வயதுகளில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கும்பமேளாவுக்குச்  சென்று வந்தவர்களில் 99 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய அமைச்சரின் மகள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web