ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜ்ய சபை துணை தலைவராக நியமனம்

 
Mukhtar-Abbas-Naqvi

ஒன்றிய அமைச்சர் மற்றும் பாஜக எம்.பி.யான முக்தர் அப்பாஸ் நக்வி ராஜ்ய சபை துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது.  இதில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் மத்திலா குரு மூர்த்தி, பாஜக எம்.பி. மங்கள் சுரேஷ் அங்காடி, ஐ.யூ.எம்.எல் எம்.பி. அப்துஸ்சமத் சமதன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

அவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவையில் புதிய அமைச்சர்களை, உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மூத்த நடிகர் திலீப் குமார் மற்றும் மூத்த தடகள வீரர் மில்கா சிங் உட்பட இந்த ஆண்டு உயிர் இழந்த எம்.பி.க்கள் மற்றும் பிரமுகர்களுக்கு மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாநிலங்களவை மதியம் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை கூடியதும் மீண்டும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் மற்றும் பாஜக எம்.பி.யான முக்தர் அப்பாஸ் நக்வி ராஜ்ய சபை துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

From around the web