ஒன்றிய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம்: புதிதாக 43 பேர் பதவியேற்க வாய்ப்பு

 
Modi

ஒன்றிய அமைச்சர்களாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து 2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒன்றிய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஒன்றிய அமைச்சர்களாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  இன்று அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் எம்.பிக்கள் பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையே, ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ராஜினமா செய்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்தவரும் ஒன்றிய ரசாயனத்துறை அமைச்சருமான சதானந்த கவுடாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

From around the web