‘கைலாசா’ தீவுக்கு ஐ.நா. சபை அங்கீகாரமா..? நித்யானந்தா வீடியோவால் பரபரப்பு

 
Nithyananda

நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவால் ‘கைலாசா’ நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதா என்ற கேள்வியும், அதனால் பரபரப்பும் எழுந்துள்ளது.

இந்தியாவில் குற்ற வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு ‘கைலாசா’ என பெயர் சூட்டி இருப்பதாக தகவல் வெளியானது.

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் சமூக வலைத்தளங்களில் நித்யானந்தா தனது சீடர்களுடன் சத்சங்கம் மூலம் உரையாடி வருகிறார். குறிப்பாக அவர் தன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீசை கிண்டல் செய்யும் வீடியோக்கள் அதிகமாக பரவியது.

இதற்கிடையே அவர் தான் உருவாக்கிய ‘கைலாசா’ நாட்டுக்கு ஐ.நா. சபையில் அங்கீகாரம் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் ‘கைலாசா’ நாட்டை யூனியன் பிரதேசமாக ஐ.நா. சபை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிடும் பதிவுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு ‘கைலாசா’ நாட்டை அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நித்யானந்தா வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது,

ராமகிருஷ்ணன், விவேகானந்தர், யோகாநந்தர், அரவிந்தர், காஞ்சன் காடபத்ம ராமதாஸ், ரமண மகரிஷி போன்ற எல்லோரும் செய்த ஒரு கலெக்டிவ் முயற்சி. சதாசிவன் அருளால் இப்போது நித்யானந்தன் நிறைவேற்றி இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனித உயிர் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. உயிர் இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறான்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

From around the web