பைக்கில் சென்ற இருவர் புலி தாக்கி பலி; மரத்தில் ஏறி ஒருவர் தப்பினார்

 
Uttar-Pradesh

உத்தரபிரதேசத்தில் வன பகுதியில் பைக்கில் சென்ற இருவர் புலி தாக்கியதில் மரணம் அடைந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள வனப்பகுதி அருகே உள்ள சாலையில் மூன்று பேர் பைக் ஒன்றில் சென்றுள்ளனர். அருகே புலிகள் சரணாலய பகுதி அமைந்துள்ளது. அதில் இருந்து, புலி ஒன்று அவர்களுக்கு குறுக்கே வந்துள்ளது. இதனை கவனித்த ஒருவர் உடனடியாக அருகில் உள்ள மரத்தில் ஏறி, சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆனால், மற்ற இருவரையும் புலி தாக்கியுள்ளது.  இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.  அவர்கள் கன்ஹாய் (வயது 25), சோனு (வயது 25) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்களுடன் வந்த மோனு என்பவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கிரிட் குமார் ரத்தோட் தலைமையிலான காவல் துறையினர், 2 பேரின் உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் ஏன் வனப்பகுதிக்குள் சென்றனர்? என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினர் தெரிவித்தனர்.  வனத்தின் நுழைவு பகுதியில் தடுப்பு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.  20 கேமிராக்களை அமைக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன என அதிகாரி நவீன் கூறியுள்ளார்.

From around the web