திருப்பதியில்  லட்டு விற்பனை களை கட்டியது! விலையைக் குறைத்த தேவஸ்தானம்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கு காரணமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு 4000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஏழுமலையானின் பிரசாதமாவது அளிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு 50 ரூபாய்க்கு அளிக்கப்பட்டு வந்த திருப்பதி லட்டு தற்போது கொரோனா ஊரடங்கு முடியும் காலம் வரை ரூ25க்கு வழங்கப்படும்
 

திருப்பதியில்  லட்டு விற்பனை களை கட்டியது! விலையைக் குறைத்த தேவஸ்தானம்!கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள  ஊரடங்கால் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர் ஊரடங்கு காரணமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு 4000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாசலபதியின்  தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஏழுமலையானின் பிரசாதமாவது அளிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு  50 ரூபாய்க்கு அளிக்கப்பட்டு வந்த திருப்பதி  லட்டு தற்போது கொரோனா ஊரடங்கு முடியும்  காலம் வரை  ரூ25க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரே எத்தனை  லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் ஓரிரு தினங்களில் லட்டு விற்பனைத் தொடங்கப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தானக் குழு அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web