ஜிம்மில் சுருண்டு விழுந்த இளைஞர் நொடிப் பொழுதில் மரணம்..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

 
Bangalore

பெங்களூருவில் ஜிம்மில் அதிக உடற்பயிற்சி செய்த நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழும் வீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு, சி.கே.அச்சிக்கட்டு பகுதியில் செயல்பட்டு வரும் கோல்டன் உடற்பயிற்சி கூடத்தில் இலவசமாக 2 நாட்களுக்கு உடற்பயிற்சியும், நடனப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த சுஜய் சாகர் என்ற அந்த இளைஞருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால், பயிற்சியை விட்டு பாதியிலேயே வெளியே வந்த சுஜய், படிக்கட்டில் அமர்ந்து தண்ணீர் குடித்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். இருப்பினும், வலி அதிகமாகி படியில் இருந்து மயங்கி விழுந்த சுஜய் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


From around the web