ரயில் முன் பாய்ந்த பெண்... நெடி பொழுதில் காப்பாற்றிய ரயில்வே காவலர்... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

 
Mumbai

மும்பையில் பெண் ஓருவர் ரயில் வரும் சமயத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

மும்பை தாதர் புறநகர் ரயிலுக்காக மக்கள் அனைவரும் காத்திருந்த சமயத்தில், நடைமேடையில் சாதாரணமாக சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ரயில் வரும் சமயத்தில் யாரும் எதிர்பாக்காத சமயத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்தார்.

அச்சமயம் அவர் அருகே வந்து கொண்டிருந்த காவலர் இதனை கண்டதும் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அந்தப் பெண்ணை தண்டவாளத்தின் மறுபக்கம் இழுத்து சென்று காப்பாற்றிய சம்பவம் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஏதோ ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.


 

From around the web