உ.பி.யில் சம்பவம் நடந்த இடத்திற்கு ஒன்றிய அமைச்சரின் மகனை அழைத்துச் சென்று போலீசார் நடிக்க வைத்து விசாரணை

 
Uttarpradesh

உத்தரப்பிரதேசத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு, ஒன்றிய இணை அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ராவை அழைத்துச் சென்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடிக்க வைத்து விசாரணை நடத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 4 பேரை சம்பவம் நடந்த போது அவர்கள் என்ன செய்தனர் என்பதை விளக்குவதற்காக அங்கு அழைத்துச் சென்று போலீசார் நடிக்க வைத்தனர்.

மேலும் 3 எஸ்யூவி கார்களை பயன்படுத்தி விவசாயிகள் போன்று மாதிரியைப் பயன்படுத்தி அதன் மீது மோதவிட்டு வீடியோ பதிவு செய்தனர்.

From around the web