பிரதமரால் வேளாண் சட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை: உமா பாரதி கருத்து

 
Uma-Bharti

வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று கடந்த வாரம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து மத்தியபிரதேச முன்னாள் முதல்வரும் ஆளும் பாஜகவின் தலைவர்களுள் ஒருவருமான உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து உமா பாரதி கூறியிருப்பதாவது, “இது நாள் வரையில், இந்தியாவில் வாழும் விவசாயிகள் அரசின் நடவடிக்கைகளால் திருப்தி அடையவில்லை.

பிரதமரால் வேளாண் சட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

From around the web