‘டிக்டாக்’க்கைப் போல் புதிய ‘சிங்காரி’! பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கம்!

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அலுவலகப் பணிகளை வீடுகளில் இருந்தே செய்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமது அதிகப்படியான நேரங்களை சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் பலரும் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலி மூலம் தங்களது வீடியோக்களை ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர். இந்த டிக்டாக் செயலியை இந்தியாவில் கோடிக்கணக்கான பேர் தினமும் உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் டிக்டாக் செயலிக்குப் போட்டியாகச் சிங்காரி என்ற செயலியைப் பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கியுள்ளனர். இந்த சிங்காரி
 

‘டிக்டாக்’க்கைப் போல் புதிய ‘சிங்காரி’! பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கம்!லகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அலுவலகப் பணிகளை வீடுகளில் இருந்தே செய்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமது அதிகப்படியான நேரங்களை சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் பலரும் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலி மூலம் தங்களது வீடியோக்களை ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர். இந்த டிக்டாக் செயலியை இந்தியாவில் கோடிக்கணக்கான பேர் தினமும் உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் டிக்டாக் செயலிக்குப் போட்டியாகச் சிங்காரி என்ற செயலியைப் பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கியுள்ளனர். இந்த சிங்காரி செயலியின் மூலம் வீடியோவை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்தல் மட்டுமின்றி, நண்பர்களுடன் சாட்டிங் செய்யவும் பயன்படுத்தலாம்.

ஆன்லைன் சம்பந்தப்பட்ட மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், வீடியோ கிளிப்ஸ், ஆடியோ கிளிப்ஸ், ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ் மற்றும் புகைப்படங்கள், செய்திகள், நகைச்சுவை வீடியோக்கள், பாடல்கள், ஸ்டேட்டஸ் வீடியோக்கள், தத்துவ வாக்கியங்கள், மீம்ஸ் ஆகியவற்றை வலைதளங்கலிருந்து எடுத்துக் கொள்ள முடியும். தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்க மொழி, பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 10 மொழிகளில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிங்காரிச் செயலிக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை ஒரு லட்சம் பேர் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web