வீட்டையே தாஜ்மஹாலாக கட்டிய கணவர்..! மனைவிக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்..

 
MP-man-build-tajmahal-for-his-wife

தனது மனைவிக்காக தாஜ்மஹாலை போன்று வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார், தற்போது இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

ஷாஜகானின் மனைவி மும்தாஜ் இறந்த பிறகு தாஜ்மஹால் ஏன் புர்ஹான்பூரில் கட்டப்படவில்லை என்று மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ஆனந்த் சோக்சே முன்பிலிருந்தே யோசித்து வந்திருக்கிறார். தாஜ்மஹால் ஒரு காலத்தில் தபதி ஆற்றின் கரையில் கட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது ஆனால் பின்னர் அது ஆக்ராவில் கட்டப்பட்டது என்பது வரலாறு.

எனவே மத்திய பிரதேசத்தில் தாஜ்மஹால் போலவே ஒரு வீட்டை தன் மனைவிக்காக கட்டியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. இந்த அழகான வீட்டை கட்டிய ஆனந்த் பிரகாஷ் சோக்சே அதனை தனது மனைவி மஞ்சுஷா சோக்சேவுக்கு பரிசாக அளித்துள்ளார்.

தாஜ்மஹால் போலவே அப்படியே கட்டப்பட்டுள்ள இந்த வீட்டை கட்டிய ஆனந்த் பிரகாஷ் சோக்சே தாஜ்மஹாலை காணும்போதெல்லாம் அவருக்குள் ஒரு ஏக்கம் தோன்றுமாம், இது ஏன் மத்திய பிரதேசத்தில் இல்லை என்று. அதன் நீட்சி தான் இந்த வீட்டை அவரை கட்டவைத்துள்ளது. அவர் கட்டியுள்ள வீட்டில் 4 படுக்கையறைகள் உள்ளன. இந்த முழு வீட்டையும் கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனதாக குறிப்புட்டுள்ளார்.

இந்நிலையில், வீட்டை டிசைன் செய்யும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பொறியியலாளர் தெரிவித்துள்ளார், எனவே அவர் வீடு கட்டும் முன் உண்மையான தாஜ்மஹாலை சென்று கவனித்து வந்திருக்கிறார். வீட்டின் உள்ளே செதுக்குவதற்கு பெங்காலி மற்றும் இந்தூர் கலைஞர்களின் உதவியையும் அவர் நாடி இருக்கிறார்.

வீட்டின் பொறியாளர் பிரவீன் சவுக்சே கூற்றும்படி இந்த வீடு 90×90 என்ற அளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் மேலே அமைந்துள்ள கோபுரம் தாஜ்மஹால் பாணியில் 29 அடி உள்ளது. வீட்டில் தாஜ்மஹாலில் உள்ளது போன்ற அதே கோபுரம் உள்ளது. இதன் தளம் ராஜஸ்தானில் உள்ள மக்ரானில் உருவாக்கப்பட்டது.

மேலும் வீட்டு பர்னிச்சர் பொருட்கள் மும்பை கலைஞர்களால் தயாரிக்க பட்டுள்ளன. வீட்டின் முதல் தளத்தில் 2 படுக்கையறைகள் மற்றும் இரண்டாவது மாடியில் மேலும் 2 படுக்கையறைகள் உள்ளன. அரங்குகள், நூலகம் மற்றும் தியான அறையும் உள்ளேயே உள்ளன. அதுமட்டுமின்றி, வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் உண்மையான தாஜ்மஹாலைப் போலவே இருளில் ஒளிரும் வகையில் ஒளிரும் படி செய்துள்ளனர்.

From around the web